sulthan

சாட்டையை சுழற்றும் கார்த்தி வைரலாகுது சுல்தான் படத்தின் டீசர்.!

நடிகர் கார்த்தி தம்பி திரைப்படத்தைத் தொடர்ந்து சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதிலும் சுல்தான் திரைப்படம் தற்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விரைவில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் மிகப்பெரிய  எதிர்பார்ப்பில் உருவாகி உள்ளது அதற்கு காரணம் இவரது சமீபத்திய படமான கைதி திரைப்படம் பெயரளவில் வரவேற்ப்பு கிடைத்ததால் சுல்தான் படத்தையும் அதே மாதிரி எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

சுல்தான் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் என்பவர் இயகியுள்ளார். படத்தை  ட்ரீம் வாரியர் பிச்சர்  பிரகாஷ் பாபு, பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன்,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும்சண்டைக்காட்சிகள் திலீப் சுப்பராயன், இப்படத்திற்கு இசை அமைப்பாளராக விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். மற்றும் எடிட்டர் ரூபன் இத்திரைப்படத்தை எடிட் செய்துளளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.