தனுஷின் கர்ணன், கார்த்தியின் சுல்தான் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து அசத்தி மக்களின் கைதட்டல்களை பெற்ற நடிகர் யார் தெரியுமா.?

0

சமீபகாலமாக நடிகர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் அத்தகைய திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

அந்த வகையில் நடிகர்கள் கார்த்தி, தனுஷ் ஆகியோரின் படங்கள் சமீபகாலமாக மாபெரும் வெற்றியை பெறுகின்றன அந்த வகையில்தான் சமீபத்தில் இவர்களது இரு திரைப்படமான சுல்தான் மற்றும் கர்ணன் ஆகிய இரு படங்களும் வசூல் வேட்டை நடத்துவதோடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கர்ணன் படம் தனுஷுக்கு இன்னொரு தேசிய விருதை வாங்கிய கொடுப்பதோடு மட்டுமல்லாமல் இந்த படம் தனது இன்னொரு லெவலுக்கு கொண்டு செல்லும் எனவும் கூறப்படுகிறது.

அதுபோல நடிகர் கார்த்திக்கும் சுல்தான் திரைப்படம் வித்தியாசமான திரைப்படமாக இருந்தாலும் அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மற்றும் ஓவர் ஆல் படம் செமையாக வந்துள்ளதால் இவரும் இன்னொரு பெஸ்ட் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

இந்த படங்களை பார்த்த பிரபலங்கள் பலரும் தனது சிறந்த விமர்சனத்தை கூறி உள்ளதால் இந்த படங்கள் இன்னும் நீண்ட நாட்கள் ஓடும் என கணிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை பார்த்த பிரபலங்களும் தனது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

கர்ணன் படத்தில் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது அதுபோல சுல்தான் படத்தில் கார்த்தியின் நடிப்பு அபாரமாக இருந்தது ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரு நடிகர் மட்டும் ஹீரோவுக்கு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்து அசத்தி உள்ளார்.  அவர் வேறு யாருமல்ல நடிகர்  லால் தான்.

சுல்தான் படத்தில் கார்த்தியின் வளர்ப்புத் தந்தையாக வலம்வருவார் லால் அதுபோல கர்ணன் படத்தில் தனுஷிற்கு வயசான நண்பர் ரோலில் வலம் வருவார் லால். இந்த இரண்டு படத்திலும் இவரது நடிப்பு அபாரமாக இருந்ததால் தற்போது அவரை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

மலையாள நடிகரான லால். தமிழில் சண்டக்கோழி படத்தில் வில்லனாக அறிமுகமானார் முதல் படத்திலேயே மிரட்டி இருந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தற்பொழுது வில்லன் ரோலை ஒதுக்கிவிட்டு சிறந்த கதையம்சம் உள்ள ரோல்களை எதிர்பார்த்தார் அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு மிகப் பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளது.