OTT தளத்தில் வெளியாகிறதா கார்த்தியின் சுல்தான்” படம்.? எந்த தளத்தில்.. எப்போது வெளிவருகிறது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் புதிய இயக்குனர்கள் வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் புதுமுக இயகுனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி  பெற்ற திரைப்படம் சுல்தான்.

இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நெப்போலியன், லால், சென்ராயன், பொன்வணன் மற்றும் நடிகையாக ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர்.  இந்தத் திரைப்படமே ரஷ்மிகா மந்தனா அவர்களுக்கு தமிழில் அறிமுகமாகும் படமாம்.

இந்த திரைப்படம் வித்யாசமான கதைக் களமாக இருந்ததால் இது அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது தற்போது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளே நல்ல வசூலை சந்தித்தது.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் மக்களின் வரவேற்பு கம்மியாகி கொண்டே செல்வதால் சுல்தான் படக்குழு இந்த திரைப்படத்தை OTT தளத்தில் ரிலீஸ் செய்ய முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படமும் வருகின்ற மே 2 தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் OTT தலத்தில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என தெரியவருகிறது ஏனென்றால் இந்தத் திரைப்படம் அந்த அளவிற்கு விறுவிறுப்பாகவும் அதேசமயம் காமெடி கலந்து இருப்பதால் படம் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment