சென்னை மாயாஜாலில் நான்காவது இடத்தில் விஜய்.. ரஜினிக்கும் அஜித்துக்கும் எந்த இடம் தெரியுமா.? இதோ டாப் டென் லிஸ்ட்..

chennai mayajaal top 10 movies list in 2023 : டிவி சேனல்கள் பத்திரிகைகள் ட்ராக்கர்ஸ் பாக்ஸ் ஆபிஸ் என வருடத்தின் இறுதியில் டாப் டென் லிஸ்ட்டை அனைவரும் வெளியிடுவார்கள் இதில் திரையரங்க லிஸ்ட்டை அதிகமாக ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே ரசிகர்களின் கோட்டை என கூறப்படும் ரோகிணி திரையரங்கம் வெற்றி திரையரங்கம் டாப் டென் லிஸ்ட்டை வெளியிட்ட நிலையில் தற்போது மாயாஜால் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் டாப் டென் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது.

அதேபோல் இந்த டாப் டென் லிஸ்டில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்தான் பெரும்பாலும் இடம் பிடிக்கும் ஏனென்றால் முன்னணி  நடிகர்களின் திரைப்படங்கள் பல காட்சிகள் ஓடப்படும் அதனால் அவர்களின் திரைப்படங்கள் தான் டாப் டென் லிஸ்டில் இடம் பிடிக்கும் அந்த லிஸ்டில் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்கள்  நல்ல வரவேற்பு கிடைக்கும்.

The Greatest of all times : Thalapathy 68 டைட்டிலுடன் வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..! இதுதான் புத்தாண்டு ஸ்பெஷல்..

இந்த நிலையில் நம்பர் ஒன் சிம்மாசனத்தை யார் பிடித்துள்ளார் என தற்பொழுது காணலாம். பத்தாவது இடத்தில் மாமன்னன் திரைப்படமும், ஒன்பதாவது இடத்தில் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும், எட்டாவது இடத்தில் ஜவான் திரைப்படமும், ஏழாவது இடத்தில் மாவீரன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் ஆறாவது இடத்தில் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மார்க் ஆண்டனி திரைப்படம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கியிருந்தார். அதேபோல் இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் துணிவு திரைப்படமும் ஒன்று இந்த திரைப்படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

கேப்டன் இறந்து ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் ‘தளபதி 68’ பட அப்டேட்டா.!

இதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் வாரிசு திரைப்படம் இடம்பெற்றுள்ளது. விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் நேருக்கு நேராக மோதிக் கொண்டது. இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் கார்த்தி விக்ரம் திரிஷா ஐஸ்வர்யா ஜெயம் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அதேபோல் இரண்டாவது இடத்தில் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தளபதியின் லியோ திரைப்படம் தான் இரண்டாவது இடத்தை தட்டி பறித்துள்ளது. லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியிருந்தார்.

தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

நல்ல எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த திரைப்படம் ஒரு சில இடங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பல இடங்களில் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. அதேபோல் முதலிடத்தில் அன்றிலிருந்து இன்று வரை சினிமாவில் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் முதலிடத்தில் இருக்கிறார் அவர் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

top 10 movie list maayaajal
top 10 movie list maayaajal