தினேஷ் குறித்து பேசியதற்கு கமல் கொடுத்த சரியான பதிலடி.. டைட்டில் வின்னராகும் தகுதியை இழந்த விசித்ரா

Bigg Boss 7 Tamil today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

குறைவான போட்டியாளர்கள் இருந்தாலும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக சண்டை போடாமல் அன்பை மட்டுமே பகிர்ந்து வந்த போட்டியாளர்கள் இந்த வாரம் முழுவதும் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றதால் கடுமையான சண்டைகள் போட்டுக் கொண்டனர்.

விஜய் சேதுபதி சட்டை பட்டன், செருப்பு பிச்சிகிச்சு.. கோவை சரளா, அபிராமி மாட்டிகிட்டாங்க – மன்சூர் அலிகான்

நடைபெற்ற அனைத்து டாஸ்க்கிலும் தனது கடின உழைப்பினாலும், யோசனையாலும் விஷ்ணு வெற்றி பெற்றுள்ளார். முதல் ஆளாக ஃபினாலே போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவீனா விசித்ராவை பாத்திரம் கழுவுமாறு கூப்பிட அழைத்த பொழுது இதனால் கடுப்பான விசித்ரா இதற்கெல்லாம் காரணம் தினேஷ் தான் என நினைத்து அவரை மிகவும் பர்சனலாக தாக்கினார்.

மேலும் ரட்சிதாவிடம் மறுபடியும் இவன் கூட வந்துடாதமா என மறைமுகமாக திட்டி தீர்த்தார் இதற்கு தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல். அதாவது தற்பொழுது வெளியாகியிருக்கும் இன்றைய ப்ரோமோவில் ரவீனா விசித்ரா மேம் என கூப்பிடுவது போலவே விசித்ரா மேம் என்று கமல் கூப்பிட்டு காண்பிக்க அனைவரும் உற்சாகமடைகின்றனர்.

கோதையை அசிங்கப்படுத்துவதாக நினைத்து சாணியை அள்ளி மூஞ்சில் பூசி கொண்ட அர்ஜுன்..! என்ன மாப்ள இந்த செருப்படி பதில் போதுமா..

அப்பொழுது விசித்ராவிடம் கமல் நீங்க தனியா கேமராவுக்காக பேசுறீங்க இல்லையா என்று கேட்க அதற்கு விசித்ரா நானா என கேட்கிறார். ஆமாம் என கமல் சொல்ல இன்னொருத்தருடைய பர்சனல் லைஃப் கொள்ள இறங்கி பேசாதீங்க என்று சொல்ல அதற்கு எதை சொல்றீங்க சார் நான் என்ன சொன்னது தவறா போச்சு என்று  கேட்கிறார்.

அதற்கு கமல் நான் மறுபடியும் சொல்லி இன்னொருத்தரை புண்படுத்த விரும்பல என சொல்ல அதற்கு விசித்ரா பேசின பேசின என சிரித்துக் கொண்டே கூறுகிறார். இதற்கு கமல் அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் இன்னொருத்தருடைய மேரேஜுக்கு நம்ப கவுன்சிலரா இருக்க முடியாது எனக் கூற ரசிகர்கள் கைதட்டுகின்றனர்.