The Greatest of all times : Thalapathy 68 டைட்டிலுடன் வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..! இதுதான் புத்தாண்டு ஸ்பெஷல்..

Thalapathy 68 Update The Greatest of all times : தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து சினேகா, லைலா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

கேப்டன் இறந்து ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் ‘தளபதி 68’ பட அப்டேட்டா.!

இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை கேரக்டரில் நடிப்பதாகவும் இதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் பல கோடி செலவில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் இளமை பருவத்தில் காண்பிப்பதற்காக மட்டுமே பல கோடி ரூபாய் செலவு செய்ய வெங்கட் பிரபு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் தளபதி 68 படத்தின் அப்டேட்டுக்காக மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வந்த நிலையில் இன்று ஆங்கில புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படக் குழு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இவ்வாறு போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை குவித்து வருகின்றது.

Vijayakanth VS Prabhu : 33 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of all times ) என டைட்டில் வைக்கப்பட்டு தற்பொழுது போஸ்டர் வெளியாகி உள்ளது இந்த போஸ்டரை பார்த்தால் விஜய் இரண்டு கதாபாத்திரம் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக் மட்டும் ஷேர் செய்து வருகிறார்கள்