கேப்டன் இறந்து ஒரு வாரம் கூட ஆகல அதற்குள் ‘தளபதி 68’ பட அப்டேட்டா.!

Thalapathy 68: லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 68 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்புகள் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6:00 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 68 திரைப்படத்தில் விஜய் இரட்டை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் மேலும் இவருடன் இணைந்து சினேகா, லைலா, பிரபுதேவா, மீனாட்சி சாவுத்ரி போன்றவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் தளபதி 68 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Vijayakanth VS Prabhu : 33 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் 2023ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக கருதப்படுகிறது. கலவை விமர்சனத்தை பெற்ற லியோ திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில் தளபதி 68 படம் இதனை விட மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் தளபதி விஜய்யை இளமை கேரக்டரில் காட்ட சில காட்சிகளுக்கு மட்டுமே வெங்கட் பிரபு பல கோடி செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு படக்குழு மாஸான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இரவு பார்ட்டியில் மீனா.. அட அதுவும் இந்த நடிகருடனா… வெளியான வீடியோ..

இன்று மாலை 6:00 மணி அளவில் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்களும் மிகவும் ஆர்வமுடன் தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்காக காத்து வருகின்றனர்.