malavika-mohanan-tamil360newz

அஜித்தை போல் ஸ்போர்ட்ஸ் பைக் ஒட்டி அனைவரையும் மிரளவைத்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா.! வைரலாகும் வீடியோ

Malavika bike ride : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் அவர்கள் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

மாளவிகா மோகனன் ஆரம்ப காலத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்ததன் முலம் சினிமா பயணத்தை தொடர்ந்தார் இதனை அடுத்து அவர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழில் தற்பொழுது நடிக்க தொடங்கியுள்ளார். தளபதி விஜய் படத்தை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வபொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள மாளவிகா மோகனன் அவர்கள் போரடிக்காமல் இருக்க பழைய வீடியோ மற்றும் போட்டோக்களை தூசு தட்டி  எடுத்து தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் மாளவிகா மோகனன் ஸ்போர்ட்ஸ் பைக் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அஜித்தை போலவே உங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்கின் ஆசை இருக்கு போல என கூறிவருகின்றனர்.

ajith-deepeti-ganesh--tamil360newz

அஜித் சார் எனக்கு கொஞ்சம் உதவி செய்யுங்கள்.! கண்ணீர்விட்டு கதறி அழுத பிரபல நடிகர்.! செவி சாய்ப்பாரா தல

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த நேர்கொண்டபார்வை மற்றும் விஸ்வாசம் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன அதுமட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்பொழுது அஜித் அவர்கள் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்,இப்படத்தை ஹச். வினோத் அவர்கள் இயக்குகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் இப்படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் படத்தின் ஷூட்டிங் தள்ளிபோய் உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மனவருத்தில் இருந்து வருகின்றனர். சினிமாவில் இருந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வருபவார்கள் வெகு சிலரே  அந்தவைகயில் சினிமாவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர்களில் தல அஜித்தும் ஒருவர்.  மக்களுக்காக ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை பல உதவிகளை செய்து வருகிறார். அதுபோல தன்னுடன் நடித்துவரும் சக நடிகர்களுக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே.

தற்பொழுது பில்லா 2 படத்தில் அஜித் அவர்களுடன் சேர்ந்து நடித்த கார்த்திக் அவர்கள் அஜித்திடம் உதவி பண்ணுமாறு கேட்டுள்ளார்.அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இந்த வீடியோவில் கார்த்திக் கண்ணீருடன் ராகவா லாரன்ஸ் அல்லது அஜித் சார் அவர்கள் யாராவது உதவுங்கள் என கண்ணீருடன் கதறி அழுது கேட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

https://twitter.com/KokkiOfficial/status/1252548776599752704?s=20