பம்ப் செட்டில் கும்மாளம் அடிக்கும் கோலமாவு கோகிலா பட நடிகை.! வைரலாகும் வீடியோ.!

jacquline
jacquline

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜாக்குலின். இப்படத்தில் இவர் நயன்தாராவுக்கு தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதனை தொடர்ந்து அவர் சிறந்த கதாபாத்திரங்கள் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அண்மையில் பேட்டி ஒன்றிலும் கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என கூறியிருந்தார். தச்சமயம் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவியில் தென்மொழி பிஏ என்ற சீரியலில் நடித்து வருகிறார் அம்மணி.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது சிறந்த பணியை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.கலக்கப்போவது யாரு மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அவர்களது தனது கியூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் அந்த வகையில் தற்போது அவர் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வயல்யோரம் உள்ள பம்புசெட் தொட்டியில் புடவையுடன் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார ஜாக்லின்.

இதோ அந்த வீடியோ.