சித்ராதேவியையே அலறவிட்ட கோடீஸ்வரி!! கௌதமுக்கே தண்ணி காட்டிய ஐஸ்வர்யா ..

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் கோடிஸ்வரி மகாவிடம் ரூமில் போய் தனியாக ஒரு வேலைக்காரியை விட அதிகமாக நீ வேலை செய்ற நான் செஞ்ச தப்புக்கு நீ தண்டனை அனுபவிக்கிற என் மேல இருக்குற கோவத்த உன் குடும்பத்தில இருக்கிறவங்க உன் மேல காட்றாங்க என்னால உனக்கு எதுவும் செய்ய முடியல என்ன மன்னிச்சிடு நான் மட்டும் அன்னைக்கு உன்னை வற்புறுத்தி கல்யாணம் பண்ணிக்க சொல்லுலனா இப்புடி ஆயிருக்காதுல என மகாவை கட்டிப்பிடித்து அழுகிறார். அதற்கு மகா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா என சொல்கிறாள் இதை  சூர்யா மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த சீனில் கௌதம் கைலாஷை வெளியில் எடுக்க வக்கீல் இடம் பேசுகிறார். அதற்கு வக்கீல் 10 லட்சம் இருந்தால் தான் வெளியே எடுக்க முடியும் என சொல்ல அவ்வளவு பணம் என்னால ஒன்னும் பண்ண முடியாது என சொல்கிறார் அதற்கு நீங்க பத்து லட்சம் ரெடி பண்ணவில்லை என்றால் கைலாஷ் அப்ரூவர் ஆகி எல்லா உண்மையையும் சொல்லிடுவான் அப்புறம் நீங்க ஜெயில்ல தான் இருக்கணும் உங்களுக்கு சொத்துல எதுவுமே கிடைக்காது என சொல்கிறார்.

கௌதம் எப்படியாவது பணத்தை ரெடி பண்ணனும் என சொல்லிக்கொண்டே ரூமுக்கு வருகிறார். அப்போது ஐஸ்வர்யா நகைகளை சுத்தம் பண்ணிக் கொண்டிருக்கிறாள். உடனே கௌதம் எனக்கு 10 லட்சம் பணம் வேணும் நான் தனியா பிசினஸ் ஆரம்பிக்க போறேன் இந்த நகைகளை தா என ஐஸ்வர்யாவிடம் கேட்கிறார்.

வீட்டுக்கு தெரியாமல் பொண்டாட்டிக்காக தூங்காமல் கூட நைட் டூட்டி பார்க்கும் கதிர்!! சரவணன் கல்யாணத்தை நிறுத்தியது யார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட மீனா!!பாண்டியன் ஸ்டோர்.

அதற்கு ஐஸ்வர்யா  இது எனக்கு பாட்டி கொடுத்த பரம்பரை நக அதோட மட்டுமில்லாமல் இப்ப எனக்கு வளைகாப்பு வருது அப்போ இந்த நகை எல்லாம் எங்கன்னு கேட்பாங்க அதனால இந்த நகையை மறந்துருங்க இதைப்பற்றி எதுவும் பேசாதீங்கன்னு சொல்லிட்டு பீரோவில் வைத்துவிட்டு செல்கிறாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதம் இரு எங்க நகையை எனக்கே தர மாட்டேங்குற, இந்த நகைய நான்  திருடிக்கிட்டு பழிய உன் மேல போட்டுடுறேன் என சொல்லிட்டு நகையை எடுத்து கொண்டு போகிறார்.

அப்போது சூர்யா கௌதமிடம் ஏன் நீ ஆபீஸ்க்கு ஒழுங்கா வரல என கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கௌதம் நகையை பின்னாடி ஒளித்து வைத்திருப்பதை பார்த்து விடுகிறார். உடனே பின்னாடி என்ன வச்சிருக்க என கேட்க சூர்யாவின் சித்தப்பாவும் அதை பார்த்து ஆமாம் பின்னாடி ஏதோ நகை பாக்ஸ் மாதிரி இருக்கே என்ன என மொத்த குடும்பமும் கேட்கின்றனர் அதற்கு கௌதம் பதில் சொல்லாமல் நிற்கிறார்.

பாக்யாவை கட்டி பிடித்து அழுது நன்றி சொல்லும் செழியன்.! மாமியாரைப் பற்றி பாக்கியாவிடம் ஏத்திவிடும் ராதிகா..

அப்போது சூர்யாவின் சித்தப்பா நகை பாக்ஸ பிடுங்கி பார்க்கிறார். பிடுங்கும்போது நகை கீழே விழுகிறது உடனே ராஜலட்சுமி நம்மளோட பரம்பரை நகையாச்சே ஐஸ்வர்யாவுக்கு பாட்டி கொடுத்ததாச்சே என கேட்க பதில் சொல்லாமல் இருக்கிறார் கௌதம். உடனே ஐஸ்வர்யா வெளியே வந்து  என்ன அவர திருடன் மாதிரி நிக்க வச்சு அவர கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.

நான் தான் இந்த நகையை கொடுத்து வளைகாப்பு வருதுன்னு பாலிஷ் பண்ண சொன்னேன் என சமாளித்துவிட்டு ரூமுக்கு வாங்க உங்களை வச்சுக்கிறேன் என சொல்லிவிட்டு போகிறார். ரூமுக்கு போன கௌதமிடம்  உன்கிட்ட நான் அப்பவே சொன்னேன்ல இந்த நகைய எடுக்காதன்னு நீ எடுத்துட்டு போயிருந்தா என் மேல தான பழி வந்திருக்கும். நான் மட்டும் உன்னை இப்ப காப்பாத்தலனா இந்த சொத்துல உனக்கு  ஒரு நயா பைசா கூட கிடைக்காது நீ பிச்சை தான் எடுக்கணும் என ஐஸ்வர்யா கௌதமை  திட்டுகிறார்.

கோலி சோடா படத்தில் நடித்த சோடாபுட்டி கண்ணாடியா இது.? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா…

அடுத்த சீனில் கோடீஸ்வரி சித்ராதேவியை பார்த்து சும்மா வீட்ல உக்காந்து தின்னுகிட்டு செரிக்கல்ன்னு சண்டைய மூட்டி விட்டுகிட்டு இருக்க இன்னைக்கு உன்னை என்ன செய்றேன் பாரு என சொல்லி சித்ராதேவியை  பயமுறுத்துகிறார். சித்ராதேவி பயந்து ஓடுகிறார். மேலும் அதோடு மட்டுமல்லாமல்  நான் இங்க உன்னை வச்சு செய்ய தான் வந்து இருக்கேன் உன்ன விட மாட்டேன் என கால் மேல் கால் போட்டு கொண்டு பேசுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.