கோலி சோடா படத்தில் நடித்த சோடாபுட்டி கண்ணாடியா இது.? இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா…

Seetha new look photo viral: தனது அசத்தலான நடிப்பினால் அனைவரையும் சிரிக்க வைத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சீதா. இவர் 2014ஆம் ஆண்டு வெளியான கோலி சோடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமானார் இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு சமீப காலங்களாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த சூழலில் தற்பொழுது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிசோடா திரைப்படத்தில் நான்கு சிறுவர்கள் இரண்டு சிறுமிகள் இணைந்து நடித்திருப்பார்கள் இவர்களை சுற்றி இப்படத்தின் கதைகளம் அமைந்தது. மேலும் இவர்களுடைய நடிப்பு பெரிதளவிலும் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

பாக்யாவை கட்டி பிடித்து அழுது நன்றி சொல்லும் செழியன்.! மாமியாரைப் பற்றி பாக்கியாவிடம் ஏத்திவிடும் ராதிகா..

அப்படி கோலிசோடா படத்தில் வரும் ATM கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. புட்டி கண்ணாடி, ஒல்லியான தேகம், எதார்த்தமான சிரிப்பினாலும் மேலும் ஒரு செடி ஒன் ப்ளவர் என்று காதலுக்கு அவர் சொல்லும் டயலாக் போன்ற தனது அசத்தலான நடிப்பினால் அனைவரையும் சிரிக்க வைத்த சீதா பிறகு அதே விஜய் மில்டன் இயக்கத்தில் சமந்தா விக்ரம் இணைந்து நடித்த 10 எண்றதுக்குள்ள மற்றும் பிரபுதேவா நிக்கி கல்ராணி நடிப்பில் உருவான சார்லின் சாப்ளின் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

Seetha new look photo viral
Seetha new look photo viral

இவ்வாறு முதல் படத்தில் கிடைத்த வரவேற்பு பிறகு வேறு படங்களில் கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது பட வாய்ப்புகளை தேடி வருகிறார் சீதா. ஒல்லியான உடல் குட்டி கண்ணாடி என இருந்த சீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். செம ஸ்டைலாக மாறி இருக்கும் சீதாவின் அழகிய புகைப்படங்கள் இதோ.