டிசம்பர் மாதத்தில் மட்டும் வெளியாகும் 6 தமிழ் படங்கள்.. சமையலில் அன்னபூரணியாக கலக்கும் நயன்தாரா

Tamil Movies: இந்த வருடம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இந்த சூழலில் இந்த ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைய இருக்கும் நிலையில் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் மட்டும் 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது அது குறித்த லிஸ்டை பார்க்கலாம்.

துருவ நட்சத்திரம்: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளுக்குப் பிறகு திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே பலமுறை ரிலீஸ் ஆவதாக கூறி பிறகு ரிலீசாகாமல் இருந்து வரும் நிலையில் ஆனால் கண்டிப்பாக டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்சார்களை மிரட்டும் கதிர்.! கடைசியில் அள்ளிக்கிட்டு தான் போகணும்.. ஜனனியின் அதிரடி முடிவு

அன்னபூரணி: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் அன்னபூரணி படம் வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி உள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

சைரன்: பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு பெரிதாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறாமல் இருந்து வரும் நிலையில் சைரன் படம் நல்ல வரவேற்புனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமும் டிசம்பர் மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

தேவதர்ஷினி -க்கு இவ்வளவு பெரிய மகளா.? மாடர்ன் டிரஸ்ஸில் கவர்ச்சி காட்டும் நியத்தி கடம்பி

கான்ஜுரிங் கண்ணப்பன்: காமெடி நடிகராக கலக்கி வந்த நடிகர் சதீஷ் நடிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ரெஜினா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க முழுக்க முழுக்க காமெடி திரில்லர் படமாக உருவாகியுள்ளதாம்.

பார்க்கிங்: ஹரிஷ் கல்யாண், இந்துஜா இணைந்து நடித்திருக்கும் பார்க்கிங் படம் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் எம்.எஸ் பாஸ்கர் முக்கிய கேரக்டரில் நடிக்க கார் பார்க்கிங் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் பிக் பாஸில் வெளியிடப்பட்டது.

போதையில் அசிங்கமாக பேசி அந்த இடத்தில் கை வைத்து கசக்கினார் – குணச்சித்தர நடிகர் குறித்து நடிகை சோனா

சலார்: பாகுபலி வெற்றியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரபாஸ் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். திரில்லர் படமாக உருவாகி இருக்கும் சலார் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது.