போதுண்டா சாமி இழுத்து மூடுங்க 1000 எபிசோடு முடிஞ்சிடுச்சு.! முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்.! புதிய சீரியலில் ஜீ தமிழ் பிரபலம்

Sun Tv Serial: தமிழ் சின்னத்திரையில் போட்டி போட்டுக் கொண்ட ஏராளமான சீரியல்கள் அறிமுகமாகி வரும் நிலையில் சன் டிவி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. எத்தனை புதிய சீரியல்கள் அறிமுகமானாலும் சன் டிவி சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. அப்படி டிஆர்பியிலும் முதல் ஐந்து இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளது.

பொதுவாக சன் டிவியின் சீரியல்கள் குடும்ப இல்லதரசிகளை கவரும் வகையில் அமைவதால் இவர்களின் பொழுதுபோக்காக அனைத்து சீரியல்களும் அமைகிறது. எனவே காலை முதல் இரவு வரை நாடகங்களுக்கு பஞ்சம் இல்லாமல் பெண்களை கவரும் வகையில் ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

காதலர் தினத்திற்கு முன்பே பிப்ரவரி- 2 ல் ரிலிஸ் ஆகும் 4 திரைப்படங்கள்.!

இவ்வாறு இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியல் 1000 எபிசோடுகளுடன் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் பூமிகா கேரக்டரின் நடித்து வந்த டெல்னா டேவிஸ் இறந்து போகிற மாதிரி காட்சிகளும் அமைந்தது அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகையை கொண்டு வந்து கதை நகர்ந்து வருகிறது.

எனவே இது போன்ற காட்சிகளும் விரைவில் நிறைவடைய இருக்கும் நிலையில் அதற்கு பதிலாக புதிய நாடகம் அறிமுகமாக உள்ளது. அதன்படி ஜீ தமிழ் சேனலில் பிரியாத வரம் வேண்டும் மற்றும் பேரன்பு போன்ற சீரியல்களில் நடித்து வந்த விஜய் வெங்கடேசன் தற்போது சன் டிவியில் மலர் என்ற புதிய நாடகத்தில் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

ஜமீன்தாராக நடித்துள்ள மாரிமுத்து.! தூக்குதுரை விமர்சனம் இதோ.!

இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் சூரியவம்சம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகிதா ராஜேஷ் கமிட்டாகி இருக்கிறாராம். மேலும் இந்த சீரியலை சரிகம நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.