காதலர் தினத்திற்கு முன்பே பிப்ரவரி- 2 ல் ரிலிஸ் ஆகும் 4 திரைப்படங்கள்.!

Tamil Movies: 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்த நிலையில் இதனை அடுத்து 2024ஆம் ஆண்டு தொடர்ந்த அடுத்தடுத்து சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை அனைத்தும் வெளியாகி வருகிறது மேலும் ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கிறது.

அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் போன்றவர்களின் திரைப்படங்களுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து வரும் நிலையில் இந்த வார வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 3ம் தேதி மட்டும் நான்கு தமிழ் திரைப்படங்கள் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

அஜித்தை விஜயக்கு எதிராக கூர் செத்திவிடும் நடிகர்.! இதுக்கு பேர்தான் நாரதர் வேலையா.?

அதன்படி சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் டிக்கிலோனா திரைப்படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி சர்ச்சையை சந்தித்த நிலையில் ஆனால் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இதனை அடுத்து இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கும் டெவில் படத்தை தம்பி ஆதித்யா இயக்கியுள்ளார். இப்படத்தில் விதார்த், த்ரிகுன், பூர்ணா சுபஸ்ரீ மற்றும் மேலும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

டிவி தொகுப்பாளர் ரக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் மறக்குமா நெஞ்சம் படமும் பிப்ரவரி இரண்டாம் தேதி ரிலீசாகிறது. இதில் துனா, மலினா, ராகுல் உள்ளிட்டா பலரும் இணைந்து நடித்துள்ளனர். பள்ளி காலத்து காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

பையனா.? பொண்ணா.? காதல் கணவருடன் விளையாட்டை ஆரம்பித்த அமலாபால்..

முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரசீம், நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார் போன்றோர்கள் இணைந்து நடித்திருக்கும் சிக்லெட்ஸ் படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான நிலையில் கடந்த வருடமே ரிலீஸ்க்கு தயாரானது ஆனால் சில காரணங்களால் தாமதமாக வெளியாகிறது.