பையனா.? பொண்ணா.? காதல் கணவருடன் விளையாட்டை ஆரம்பித்த அமலாபால்..

நடிகை அமலாபால் தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் அதனை தொடர்ந்து  மைனா, காதலில் சொதப்புவது எப்படி, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, தலைவா, ராட்சசன், நிமிர்ந்து நில் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர்  குறுகிய நாட்களிலேயே முன்னானி நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவர் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் பின்னர் மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பையனா.? பொண்ணா.? காதல் கணவருடன் விளையாட்டை ஆரம்பித்த அமலாபால்..

அதன் பின் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்து தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார். மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதோடு மட்டுமல்லாமல் வெப்  சீரிஸிலும்  நடித்து வருகிறார்.

மேலும் இவர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடன் இருக்கும் புகைப்படங்களை தனது  Instagram பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து  தற்போது கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்திலும் மலை மீது ஏறி பாறை ஒன்றில் அமர்ந்து யோகாசனம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்ட சன் பிக்சர்.! லிஸ்டில் இடம் பிடித்த மூன்று திரைப்படங்கள்..

மேலும் அந்த பதிவில்  கர்ப்ப காலத்தில் மலையாசனம்  அழகாக இருக்கிறது. மேலும் இந்த மலை ஆசனம் தனது இடுப்பு சக்தியை அதிகரிக்கும் மந்திரமாக உள்ளது.. நீண்ட கடற்கரையில் உடற்பயிற்சி செய்வது, சூரிய அஸ்தமனத்தை வெறுங்காடுடன் பார்ப்பது கர்ப்ப நேரத்தில் ஏற்படும் குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும்.

எனது கால்கள் மணலையும் உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக கருதுகிறேன். மேலும் அத்துடன் பொறுப்பு துருப்பையும் கொடுத்துள்ளார். இந்த ஆசனத்தை மருத்துவரின் ஆலோசனையின் படி செய்யவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜகத் தேசாய் ஒரு சிறந்த கணவர் மற்றும் சிறந்த நண்பர் அவர் என்னை என் ஓட்டத்தில்  ஓட விட்டு தடுக்காமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.. அது மட்டும் இல்லாமல் ரொமான்டிக்காக இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

அதுமட்டுமில்லாமல் தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என விளையாடி அந்தப் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு ட்வின்ஸ் குழந்தைகள் பிறக்கும் என்றும் சிலர் உங்களைப் போலவே அழகான பெண் குழந்தை பிறக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..

amala paul
amala paul