சீரியலில் ஒரு எபிசோட்டுக்கு அதிக சம்பளம் வாங்கும் 5 நடிகைகள்.! விஜய் டிவி பிரபலத்திற்கு அள்ளிகொடுத்த சன் டிவி.!

Top 5 Serial Actress Salary: சமீப காலங்களாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் சின்னத்திரை நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் வெள்ளித்திரை நடிகைகளைவிட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நாள்தோறும் இவர்களை பார்ப்பதனாலோ என்னவோ விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர். இவ்வாறு சின்னத்திரை நடிகைகள் தங்களது பிரபலத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் ஒரு எபிசோடுக்கு அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

5. பாப்ரி கோஷ்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் ஹீரோயினாக கயல்விழி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை பாப்ரி கோஷ். இவர் ஒரு எபிசோடுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

மேகனாவை போட்டு தள்ளி சரஸ்வதி மீது பழியை போட பார்க்கும் அர்ஜுன்… கலிவரதன் பற்றி மொத்த உண்மையையும் உமாபதி மூலம் தெரிந்து கொண்ட மேகனா..

4. கேப்ரில்லா: யூடியூபில் டப்ஸ்மாஷ் செய்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான கேப்ரில்லா தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் ஒரு எபிசோடு இருக்கு ரூ.12000 சம்பளம் வாங்கி வருகிறார்.

3. ஆலியா மானசா: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலின் மூலம் பிரபலமான ஆலியா மானசா தற்பொழுது சன் டிவியின் இனியா சீரியலில் நடித்து வருகிறார் இவர் ஒரு எபிசோடுக்கு ரூ.20,000 சம்பளம் வாங்கி வருகிறாராம்.

2. சைத்ரா ரெட்டி: டிஆர்பி யில் முன்னணி வகித்து மாஸ் காட்டி வரும் சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஒரு எபிசோடுக்கு ரூபாய் 20000 சம்பளம் வாங்குகிறாராம்.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

1. மதுமிதா: அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் மக்கள் மத்தியில் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோயின் ஆக ஜனனி என்ற கேரக்டரில் அடுத்து வரும் மதுமிதா ஒரு எபிசோடுக்கு இவரும் ரூ.20000 பெற்று வருகிறாராம்.