ஜமீன்தாராக நடித்துள்ள மாரிமுத்து.! தூக்குதுரை விமர்சனம் இதோ.!

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தூக்குதுரை.இந்த திரைப்படத்தில்  யோகி பாபு, இனியா, மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, பால சரவணன், சென்ராயன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இதில் ஜமீன்தாராக மாரிமுத்து நடித்துள்ளார். அவருக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கிடைக்கிறது. இவருக்கு முதல் மரியாதை கிடைப்பது பிடிக்காமல் அவரது உறவினரான  நமோ நாராயணன் அவருக்கு எதிரியாகிறார். மாரிமுத்துவின் மகள் தான் இனியா.

சிலிவ்லெஸ் உடையில் பசங்களை பஸ்மாமாக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை .! ரொம்ப உத்து பாக்காதிங்க..

யோகி பாபு கோவில் திருவிழாக்களில் ரேடியோ செட்டு கட்டும் ஏழை நபராக இருக்கிறார். இவர் மீது இனியாவிற்கு காதல் வருகிறது. எனவே அதன் காரணமாக இவர்கள் இருவரும் ஊரை விட்டு ஓடி விடுகின்றனர்

அப்படி ஓடும் போது யோகி பாபுவை மாரிமுத்து ஆட்கள் கிணற்றின் அருகே தீ வைத்து எரித்துக் கொன்று விடுகின்றனர். மேலும் அந்தக் கிணற்றில்  ஒரு தங்க கிரீடம் இருக்கிறது.

அந்த கிரீடத்தை எடுக்க முயற்சிப்பவர்களை யோகி பாபு பேயாக வந்து பயமுறுத்துகிறார். இந்த திரைப்படம் ஒரு சமூக ஏற்றத்தாழ்வுகளை பற்றி வெளிக்காட்டி உள்ளது.

அஜித்தை விஜயக்கு எதிராக கூர் செத்திவிடும் நடிகர்.! இதுக்கு பேர்தான் நாரதர் வேலையா.?

சென்ராயன், பால சரவணன் மற்றும் மகேஷ் மூவரும் தங்க கிரீடத்தை திருட அலைவது  மிகவும் காமெடியாக இருக்கிறது. மேலும் மொட்டை ராஜேந்திரன் ஒரு சில காட்சிகளில்  வந்தாலும் அவரது காமெடியும் ரசிக்கும் வகையில் உள்ளது…

மேலும் இந்த திரைப்படம் காதல் கதையாக ஆரம்பித்து பேய் கதையாக முடிவடைகிறது. இந்த திரைப்படம்  ஒரு நாடகம் பார்ப்பது போல் உள்ளது என்பது பலரது கருத்து.