பாலுக்கு காவல் பூனையா.? லிப் கிஸ் அடிக்கும் நீங்கள் பெண் உரிமை பற்றி பேசலாமா.! ஆவேசப்பட்ட யுகேந்திரனின் மனைவி

Bigg Boss season 7 Tamil: சமீபத்தில் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கும் நிலையில் இதனால் யுகேந்திரன் மனைவி சரமாரியாக கமலை கேள்வி கேட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் எடுத்து இருக்கும் அதிரடி முடிவு ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. தற்பொழுது சோசியல் மீடியாவே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

பிரதீப்பிற்கு பயந்து அனைத்து பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் வேண்டுமென்றே பழி போட்டு சேர்ந்து பிரதீப்பை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி உள்ளார்கள். அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் அளித்த புகாரில் பெண்களுக்கு பாதுகாப்பு கருதி ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி உள்ளனர்.

மடியில் படுத்துக்கொண்டு கொஞ்சும் செழியன்.! வீடியோவை காட்டி மொத்த குடும்பத்தையும் அதிரவிட்ட மாலினி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

இந்த முடிவு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. எனவே இந்த முடிவிற்காக பிரபல பின்னணி பாடகர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பிக் பாஸ் யுகேந்திரனின் மனைவி மாலினி கமலின் இந்த முடிவுக்கு கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.

அப்பொழுது கமல்ஹாசன் புன்னகை மன்னன் படத்தில் நடிக்கும் பொழுது அப்படத்தின் ஹீரோயினான ரேகாவை அவரிடம் சொல்லாமலேயே லிப் லாக் அடித்ததை சுட்டிக்காட்டி 16, வயது பெண்ணை இப்படி பண்ணிய இவரலாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா என கேள்வி எழுப்பி உள்ளார்.

BIGGBOSS 7 : போட்டியாளர்களின் சூழ்ச்சியில் சிக்கி வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஆண்டனி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

மேலும் அவர் நடிச்ச முக்கால்வாசி படங்களில் லிப் லாக் சீன் இல்லாமல் இருக்காது தற்பொழுது பெண்களுக்காக பேசுவதாக கூறுவது சுத்தமாக புரியவில்லை. அவர் இதையெல்லாம் அரசியல் நோக்கத்தோடு தான் பேசி வருவதாக மாலினி கமல்ஹாசனை குற்றம் சாட்டிவுள்ளார்.