BIGGBOSS 7 : போட்டியாளர்களின் சூழ்ச்சியில் சிக்கி வீட்டை விட்டு வெளியேறிய பிரதீப் ஆண்டனி வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

BiggBoss 7 : கடந்த மாதம் விஜய் டிவியில் பிக்பாஸ் 7 வது சீசன் தொடங்கி ஐந்து வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ஓடிக்கொண்டு இருக்கிறது இதில் இதுவரை அனன்யா, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்ன பாரதி போன்றோர் எவிக்ஷனில் வெளியேறிய நிலையில் பாபா செல்லதுரை உடல்நிலை குறைவு காரணமாக வெளியேறினார்.

மேலும் கடந்த சனிக்கிழமை எபிசோடில் பிரதீப் ஆண்டனிக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்கள் சேர்ந்து ஒருமனதாக ரெட் கார்டு கொடுத்து அவரை பிளான் போட்டு வெளியே துரத்தி விட்டனர்..  பிரதீப் ஆண்டனி தமிழ் சினிமாவில் அருவி, டாடா போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்..

ஆல் ஏரியாலேயும் அய்யா கில்லி டா.. லியோ திரைப்படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இவர் சினிமாவில் ஒரு நடிகனாக மற்றும் இயக்குனராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.. இந்த வீட்டிற்கு வந்த பிறகு பிக்பாஸ் டைட்டில் நாம் அடித்தே ஆக வேண்டும் அதன் மூலம் வரும் காசும் நமக்கு முக்கியம் என நினைத்து ஆரம்பத்தில் ஒரு சில வாரம் நன்றாக விளையாடி வந்த பிரதீப் ஆண்டனி..

கடைசியாக நம்ம ஜெயிக்கிறதுக்கு மத்த போட்டியாளர்களை எப்படி டார்கெட் பண்ணி வெளிய அனுப்புறது என சில போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு பல திட்டங்களை தீட்டினார்.. இப்படி இருந்த நிலையில் அண்மையில் ஒரு டாஸ்கில் கூல் சுரேஷ் இருக்கும் பிரதீப் இருக்கும் ஒரு சண்டை வந்தது அதில் பிரதீப் ஸ்கூல் சுரேஷை சில கேட்ட வார்த்தைகள் சொல்லி திட்டி விட்டார்..

ராகினியை ஏமாற்றி மொத்த சொத்தையும் எழுதி வாங்கும் அர்ஜுன்.! இனிமேதான் இருக்கு பஞ்சாயத்தே… தமிழும் சரஸ்வதியும்..

இந்தப் பிரச்சனையின் மூலம் இதற்கு முன் பிரதீப் செய்த எல்லா செயலையும் கமலிடம் சொல்லி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தே ஆகவேண்டும் என சில போட்டியாளர்கள் பிரதீப்பை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர்.. ஆனால் இதற்கு வெளியே ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் பிரதீப் ஆண்டனிக்கு பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு 20,000 என அவர் இருந்த மொத்த நாளைக்கும் 6 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லபடுகிறது.