9 வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.!

yennai arindhaal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் இவர் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் அஜித் கடந்த 10 வருடங்களாக பெரும்பாலும் சிறுத்தை சிவா மற்றும் வினோத் இயக்கத்தில் தான் தொடர்ந்து நடித்து வந்தார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு திரைப்படங்களில் நடித்தார் அதே போல் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு எனும் மூன்று திரைப்படங்களில் நடித்தார்.

ரம்பா என்னப்பா ரம்பா பிக் பாஸ் ஜோவிகாவா பாருங்க.. ஆத்தாடி இம்புட்டு கிளாமர் ஆகாதும்மா..

இப்படி பத்து ஆண்டுகளில் இவர்கள் இருவரின் திரைப்படத்தில் ஏழு திரைப்படத்தில் நடித்துள்ளார் மீதி இருக்கும் ஒரே ஒரு திரைப்படம் என்னை அறிந்தால் திரைப்படம் தான் அது மட்டுமே அஜித் கடந்த 10 ஆண்டுகளில் எட்டு திரைப்படத்தில் வேறொரு இயக்கத்தில் நடித்த திரைப்படம். ஆனால் தற்பொழுது அஜித் மற்ற இயக்குனர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்வந்துள்ளார் அந்த வகையில் மகிழ்திருமேனி ஆதிக் என அடுத்தடுத்த வரிசை கட்டி நிற்கிறார்கள் இயக்குனர்கள்.

2015 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் என்னை அறிந்தால். இந்த திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா அருண் விஜய் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் வேதாளம், வீரம் ஆகிய திரைப்படங்களில் மாபெரும் வெற்றியை என்ன அறிந்தால் பெற முடியவில்லை ஆனால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக என்னை அறிந்தால் திரைப்படம் இருந்தது அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம்.

100 கோடி வருமானத்தை தூக்கிப் போடுகிறார் விஜய்.. வேதனையுடன் பிரபல நடிகர் போட்ட பதிவு.

மேலும் இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் அவருக்கும் மிகப்பெரிய வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

2015 ஆம் ஆண்டு வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படம் உலக அளவில் 118 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. என்ன அறிந்தால் திரைப்படம் வெளியாகி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வசூல் விவரம் மீண்டும் வைரலாகி வருகிறது.