தமன்னா நடித்தால் நாங்கள் நடிக்க மாட்டோம்.. பின்வாங்கிய பிரபல நடிகைகள்.. உண்மையை உடைத்த ஹீரோ

Actress Tamannaah: தமன்னா நடித்த படத்தில் நாங்கள் நடிக்க மாட்டோம் என பிரபல நடிகைகள் பின்வாங்கியதாக ஹீரோ ஒருவர் தெரிவித்துள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மில்க் பியூட்டி என அழைக்கப்படும் தமன்னா தொடர்ந்து கோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார்.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான தமன்னா சமீப காலங்களாக படுக்கையறை காட்சிகளில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் அந்தரங்க காட்சிகளில் நடித்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆட்டத்தை ஆரம்பித்த கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

மேலும் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். விரைவில் விஜய் வர்மா மற்றும் தமன்னா திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

எனவே இதன் மூலம் தமன்னாவின் நடனத்திற்க்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. தற்பொழுது தமன்னா பாந்த்ரா என்ற மலையாள திரைப்படத்தில் முதன்முறையாக நடித்து வருகிறார். இப்படத்தில் தமன்னாவிற்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஹீரோ திலீப் குமார் இயக்குனர் ஏராளமான நடிகைகளை பரிந்துரை செய்ததாகவும் ஆனால் இறுதியாக இந்த கேரக்டருக்கு தமன்னா தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து அவரிடம் கதை கூறி ஒப்பந்தம் பெற்றதாகவும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் நடிகர் ஜெயம் ரவி.! என்ன காரணம் தெரியுமா.?

தமன்னா தவிர இன்னொரு முக்கிய பெண் கேரக்டர் இருந்த நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பின் வாங்கினர்கள் தமன்னா நடித்தால் எங்களது கேரக்டர் பெரிதாக தெரியாது என்பதால் ஒரு சில நடிகைகள் நடிக்க மறுத்து விட்டதாக கூறினார்.

ஆனால் மம்தா மோகன்தாஸ் அந்த கேரக்டரில் தைரியமாக நடித்தார் என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் நடிகர் திலீப் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். இன்று பாந்திரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது.