ஆட்டத்தை ஆரம்பித்த கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Japan Movie : நடிகர் கார்த்தி வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சர்தார், பொன்னியின் செல்வன் பார்ட் 1, பார்ட் 2 படங்களை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ஜப்பான் படத்தில் நடித்தார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது ஜீவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. கதை என்னவென்றால் தனது தாய்க்காக சின்ன சின்ன திருட்டு வேலையை ஆரம்பத்தில் செய்கிறார் ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படுகிறார். இந்த மாதிரியான நேரத்தில் தான் ராயல் நகை கடையில் 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.

யாரு முதல்ல இருக்காங்க என்பது முக்கியம் இல்ல.. கடைசியில யார் ஜெயிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாள் வசூல் இதோ..

இதனை ஜப்பான் என்கின்ற கார்த்தி தான் பண்ணியிருப்பார் என பலரும் கூறுகின்றனர். அவரை தேடி அலைகின்றனர் முதலில் எஸ்கேப்பாகும் கார்த்தியை கடைசியில் பிடித்து விசாரிக்கும் போது நான் அந்த 200 கோடி மதிப்பிலான நகையை கடத்தவில்லை என கூறுகிறார் வேறு யாரோ என் மீது பழியை போட்டு விட்டார்கள் என கூறுகிறார் அதன் பிறகு நடக்கும் ஆக்சன், எமோஷனல் தான் படத்தின் கதை..

கார்த்தி நடிப்பு படத்தை தூக்கி நிப்பாட்டுகிறது அவருக்கு இணையாக ராதா கதாபாத்திரம் சூப்பராக இருக்கிறது மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஜித்தன் ரமேஷ், அனு இம்மானுவேல் என பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளனர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடைக்கு வந்து கதிரை மிரட்டி விட்டு போகும் குமரவேல்.. கொந்தளித்த முத்துவேல், சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

இப்படி இருக்கின்ற நிலையில் ஜப்பான் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் ஜப்பான் திரைப்படம் உலக அளவில் சுமார் 8 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்கள் விடுமுறை நாள் என்பதால் நிச்சயம் ஜப்பான் திரைப்படம் பெரிய வசூலை அள்ளிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.