யாரு முதல்ல இருக்காங்க என்பது முக்கியம் இல்ல.. கடைசியில யார் ஜெயிக்கிறாங்க என்பதுதான் முக்கியம்.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாள் வசூல் இதோ..

jigarthanda double x box office : தீபாவளி தின சிறப்பு திரைப்படமாக நேற்று நவம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்துடன் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் போட்டியாக வெளியாகி உள்ளது.

படத்தில் எஸ் ஜே சூர்யா பயந்த சுபாகம் கொண்ட நடிகராக நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சிலரின் சூழ்ச்சியால் கொலைபழியை சுமந்து கொண்டு ஜெயிலுக்கு போகும் எஸ் ஜே சூர்யா எப்படியாவது ராகவா லாரன்ஸ் போட்டு தள்ள வேண்டும் என வெளியே வருகிறார். ராகவா லாரன்ஸ்க்கு நடிப்பதில் அதிக ஆர்வம் என்பதால் எஸ் ஜே சூர்யா இயக்குனராக மாறுகிறார்.

என் வாழ்க்கையை நாசமாக்கின மாதிரி ஜெனி வாழ்க்கையை நாசமாக்க பாக்கறீங்களா,. ஈஸ்வரியிடம் மல்லுக்கட்டும் பாக்யா.! பண்றதெல்லாம் பண்ணிட்டு கால்ல விழுந்தா சரியாயிடுமா செழியா.

பிறகு ராகவா லாரன்ஸை போட்டு தள்ளினாரா இடைவெளி காட்சியில் ஒரு இடத்தில் அனைவரும் மாட்டிக் கொள்கிறார்கள் அதன் பிறகு நடக்கும் தரமான சம்பவமே ஜிகர்தண்டா திரைப்படத்தின் கதை. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார் மேலும் ஜிகர்தண்டா திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். படம் அருமையாக இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில் 5 வருடத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லை என்றாலும் இரண்டாவது பாதியில் கடைசி 40 நிமிடங்கள் ரசிகர்களிடையே கைத்தட்டலையும் வரவேற்பையும் பெற்றுள்ளன இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷல் ஆக கார்த்தியின் ஜப்பான் படத்துடன் ஜிகர்தண்டா மோதி வெற்றி பெறும் என பலரும் கூறி வந்த நிலையில் தற்பொழுது பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

என்னை ஏமாத்திட்டு நீ சந்தோஷமா தல தீபாவளி கொண்டாடுறியா. ஸ்ருதி கதையை முடிக்க பார்த்த விச்சு – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம், மகான் திரைப்படங்கள் நேரடியாக OTT இணையதளத்தில் வெளியாகியது ஆனால் ரசிகர்களிடம் சரியாக வரவேற்பு பெறவில்லை இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது அப்படி இருக்கும் நிலையில் முதல் நாளில் இரண்டு கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அதாவது 1.75 கோடி பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் நிலையில் ஜப்பான் வசூலை விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  வசூல் குறைவாக இருந்தாலும் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் சிறப்பான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.