சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் நடிகர் ஜெயம் ரவி.! என்ன காரணம் தெரியுமா.?

Jayam Ravi in Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நேரத்தில் ஜெயம் ரவி நவம்பர் 11ஆம் தேதி ஆன இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

மேலும் கடைசியாக வெளியான இறைவன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வினை சந்தித்தது. இந்த படங்களை தொடர்ந்து வருகின்ற 2024ஆம் ஆண்டு பிரதர், சைரன், ஜெனி மற்றும் உலக நாயகன் கமலஹாசனின் தக் லப் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்த அனுஷ்கா நீ தான்.. உடல் எடையை ஏத்தி ஆளே மாறிப்போன கேத்தரின் தெரசா -ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த புகைப்படம்

அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில் உலகநாயகனுடன் தக் லைப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் ஜெயம் நடிப்பில் விரைவில் சைரன் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தினை ஆண்டனி பாக்யராஜ் இயக்க பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அதற்கான டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின்படி நடிகர் ஜெயம் ரவி நவம்பர் 11ஆம் தேதியான இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதாகவும் அங்கு உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் ஜெயம் ரவியின் சைரன் படத்தின் டீசரை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்டத்தை ஆரம்பித்த கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. முதல் நாளில் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

இவ்வாறு இது ஒரு lபுறம் இருக்க இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏராளமான சண்டை சச்சரவுகள் இருந்து வந்த நிலையில் மாயா பூர்ணிமாவின் ஏஜென்ட் டீமை கமல்ஹாசன் கேட்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.