அஜித்திடம் தோற்றுப் போன லியோ விஜய்.! ஜெயிலாரால் கூட முறியடிக்க முடியாத சாதனை..

Leo vs viswasam: விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் லியோ இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க ஹிந்தி நடிகர் சஞ்சய், திரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்தனர்.

திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டிய லியோ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 15ஆம் தேதி முதன் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பானது. எனவே இதனை அடுத்து டிவியில் ரிலீஸ் ஆன லியோ படத்தின் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேகனாவை போட்டு தள்ளி சரஸ்வதி மீது பழியை போட பார்க்கும் அர்ஜுன்… கலிவரதன் பற்றி மொத்த உண்மையையும் உமாபதி மூலம் தெரிந்து கொண்ட மேகனா..

அதன்படி 16.30 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தை 13.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இது ரஜினியின் ஜெயிலர் பட டிஆர்பி ரேட்டிங் விட அதிகம் என்றாலும் இதற்கு முன்பு வெளியான விஸ்வாசம் பட சாதனையை முறியடிக்க முடியவில்லை. அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அதன்படி ஜெயிலர் படம் 15.59 புள்ளிகளைப் பெற்ற நிலையில் லியோ அதைவிட அதிகமாக பெற்றது. இதனை அடுத்து விஸ்வாசம் படம் முதல் ப்ரீமியரில் 18.14 மில்லியன் பேர் பார்த்திருந்தனர். இவ்வாறு அஜித்தின் விஸ்வாசம் பட சாதனையை விஜய்யின் லியோ படம் முறியடிக்கவில்லை.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

இவ்வாறு லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அஜித்தும் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.