ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய லாபம் பார்த்த விஷாலின் ரத்னம் படம்.. வெளிவந்த அப்டேட்

Rathnam : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஷால். செல்லமே, சண்டக்கோழி, திமிரு, மருது, மலைக்கோட்டை  என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் நடிகர் சங்க செயலாளராக மாறினார் அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை..

வெற்றிக்காக ஏங்கிய விஷால் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்தார். படம் முழுக்க முழுக்க என்டர்டைன்மென்ட் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில்  படம் சென்றது அதனால் அதிக நாட்கள் ஓடிய வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் செய்த உதவி..! லிஸ்ட் பெருசா போகுது

தற்பொழுது ஆக்சன் படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்த ஹரிவுடன் கூட்டணி அமைத்து விஷால் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அந்த படத்திற்கு “ரத்னம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் விஷாலுடன் இணைந்து ப்ரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு..

சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது இந்த நிலையில் ரத்னம் படத்தை அமேசான்  OTT நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

Rathnam
Rathnam

பரணியைப் போல் பிக் பாஸ் வீட்டில் கடுப்பாகி சுவரெறி குதிக்க முயற்சித்த போட்டியாளர்.. நடந்தது இதுதான்.!

விஷால் கேரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு விற்று இருப்பதாக செய்திகள் வருகின்றன. ரத்னம் படத்தில் விஷாலின் லுக் வெறித்தனமாக இருக்கிறது நிச்சயம் ஆக்ஷன் காட்சிக்கு பஞ்சமிருக்காது பெரிய ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.