அண்ணனால் பல படங்களை தவற விட்டுள்ளேன்..? தளபதி விஜய் பற்றி மனம் திறந்த விக்ராந்த்.!

Vikrant interview about actor Vijay: தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனக்கு கிடைக்கும் கேரக்டரில் நடித்த வந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வரும் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர்தான் விக்ராந்த். 1991ஆம் ஆண்டு மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை அடுத்து 2005ல் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் இதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படி கோரிப்பாளையம், கவன், தொண்டன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

சிலுக்கு இன்னும் சாகலடா..? எல்லை மீறிய ரித்திகா சிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள் கமெண்ட்.!

இதனை அடுத்து தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து விஷ்ணு விஷாலும் நடித்திருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த விக்ராந்த் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவம் மற்றும் தனது சகோதரரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜய் குறித்தும் கூறியுள்ளார்.

என் ராசாவை இதுவரை நெஞ்சில் சுமந்தேன்.. இனிமேல் கையிலையும் சுமப்பேன்… வைரலாகும் பிரேமலதா டாட்டூ குத்திக் கொள்ளும் வீடியோ

அதில் அண்ணனால் பல படங்களைத் தவர விட்டிருக்கிறேன், பல இயக்குனர்கள் என்னிடம் இந்த படத்தில் ஒரு கேமியோ ரோல் இருப்பதாகவும் விஜய்யை சந்திக்க வைக்குமாறு அல்லது படத்தின் ப்ரோமோசனுக்கு வருமாறு கேட்டுள்ளனர். ஆனால் நான் அதனை செய்ய மறுத்துவிட்டேன் நான் ஒருபோதும் அண்ணனிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.

அவரை சந்திக்கவோ அல்லது புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் எனது நண்பர்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை நான் கேட்பதற்கு முன்பே விஜய் எனக்கு பல வழிகளில் உதவி செய்துவிடுவார். ஆனால் நானே அவரிடம் எந்த உதவியும் கேட்டு செல்லவில்லை என்று விக்ராந்த் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்