விக்ரம் ஏஜென்ட் டினா உடன் விஜயின் ரீல் தங்கை போட்ட ஆட்டம்… வைரலாகும் வீடியோ..

vikram movie agent tina dance with madonna sebastian : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது ஆனால் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது இதனை அதிகாரப்பூர்வமாக பட குழுவை அறிவித்தது.

அதுமட்டுமில்லாமல் லியோ சக்ஸஸ் பார்ட்டி மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த சக்சஸ் பார்ட்டியில் விஜய் ஏதாவது குட்டி ஸ்டோரி சொல்லுவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தன்னை விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார் எனவும் அதுக்காக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுவாரு எனவும் விஜய் ரசிகர்களும்  வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

விக்ரம் ஏஜென்ட் டினா உடன் விஜயின் ரீல் தங்கை போட்ட ஆட்டம்… வைரலாகும் வீடியோ..

லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய்க்கு தங்கையாக நடித்தவர் மடோனா செபஸ்டியன்  இவர் விஜய் உடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாமல் விஜய் உடன் இணைந்து நடனமும் ஆடியுள்ளார். நான் ரெடி பாடலுக்கு தான் மடோனா செபஸ்டியன் நடனம் ஆடி இருந்தார். விஜய் உடன் இணைந்து நடனம் ஆடுவது அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் அவ்வளவு எனர்ஜியாக விஜய் நடனம் ஆடுவார் அவருடன் இணையாக நடனம் ஆட வேண்டும் என்றால் நல்ல பிராக்டிஸ் செய்தால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் மடோனா செபஸ்டியன் நான் ரெடி பாடலுக்கு முரட்டுத்தனமாக ப்ராக்டிஸ் செய்துள்ளார் மடோனா செபஸ்டியன் நடன இயக்குனர் வசந்தியுடன் இணைந்து பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது நடனத்திற்காக பயிற்சி செய்யும் மடனா செபஸ்டியன் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

லியோ சக்சஸ் லோகேஷ்க்கு கிப்ட் அறிவித்த தயாரிப்பாளர்… அந்தரத்தில் பறக்கும் லியோ 2 அறிவிப்பு… என்னய்யா சொல்றீங்க…

வீடியோவில் நடன இயக்குனர் வசந்தி இடம் பெற்றுள்ளார் இவர் ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.