லியோ சக்சஸ் லோகேஷ்க்கு கிப்ட் அறிவித்த தயாரிப்பாளர்… அந்தரத்தில் பறக்கும் லியோ 2 அறிவிப்பு… என்னய்யா சொல்றீங்க…

Leo 2 update: லியோ 2 அப்டேட் கேட்க அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளரிடம் கிப்ட் கேட்டு இருப்பதாகவும் அது வந்தவுடன் லியோ 2 அப்டேட் வரும் என கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்கிறார்.

இவ்வாறு இவருடைய படங்கள் அனைத்திலும் மாஸான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். அப்படி விஜய்யின் லியோ படத்தினை தொடர்ந்து ரஜினி உடன் தலைவர் 171வது படத்தினை இயக்க உள்ளார். அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற முடிந்தது.

லியோ சக்ஸஸ் மீட்டில் திரிஷா தலையில் ஐஸ் கட்டியை தூக்கி வைத்த விஜய்.. குந்தவை என்றால் சும்மாவா.!

இதில் கலந்துக் கொண்ட லோகேஷ் கனகராஜ் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை நன்றி ஒன்று மட்டுமே எனவும் தெரிவித்தார். கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ 12 நாட்கள் முடிவில் ரூபாய் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியிட்டது.

இதனை அடுத்து பேட்டி ஒன்றில் லியோ படத்தில் இருக்கும் ஃப்ளாஷ்பாக் காட்சிகள் குறித்து கேட்க அது பொய்யாக கூட இருக்கலாம் என்று லோகேஷ் செக் வைத்தார். பிறகு சில சீன்களை எடிட் செய்து விட்டதாகவும் கூறிய நிலையில் ஆனால் லோகேஷ் பொய் சொல்வதாக விமர்சகர்கள் விமர்சிக்க லோகேஷ் ஆதாரத்துடன் பிளாஷ் பேக்கில் மன்சூர் அலிகான் பேசும் வீடியோவை வெளியிட்டார்.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வனாக வாழ்ந்தது போல்.! விஜய்யிடம் அர்ஜுன் கேட்ட கேள்வி…

மேலும் இதனை அடுத்து லியோ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இடம் லியோ படத்தின் 2 அப்டேட் கேட்க அதற்கு என்னுடைய கிப்ட் என்ன ஆச்சுன்னு தயாரிப்பாளர் கிட்ட கேட்டேன், ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்க என்று சொன்னார். ஹெலிகாப்டர் வந்ததும் அதில் வந்து லியோ 2 குறித்து அறிவிப்பேன் என தெரிவித்திருப்பது ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.