லியோ சக்ஸஸ் மீட்டில் திரிஷா தலையில் ஐஸ் கட்டியை தூக்கி வைத்த விஜய்.. குந்தவை என்றால் சும்மாவா.!

Leo Success Meet Vijay Speech: லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகை திரிஷாவை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பல விமர்சனங்களுக்கு மத்தியில் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

லியோ வெளியாகுவதற்கு முன்பு பில்டப் அதிகமாக இருந்ததால் ஆனால் ரிலீசுக்கு பிறகு சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை லியோ பூர்த்தி செய்யவில்லை. எனவே கலவை விமர்சனத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த லியோ கடந்த 12 நாட்களில் 600 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத் , மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்க அனிருத் இசை அமைத்திருந்தார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் லியோ படத்தை தயாரித்தது.

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வனாக வாழ்ந்தது போல்.! விஜய்யிடம் அர்ஜுன் கேட்ட கேள்வி…

படம் ரிலீசுக்கு முன்பிலிருந்து தற்போது வரையிலும் பஞ்சாயத்து ஓயாமல் இருந்து வரும் நிலையில் வெற்றி விழாவின் மூலம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். அப்படி நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுவதாக விமர்சனம் செய்யப்பட்டதற்கு முடிவு கட்டினார்.

மேலும் தனது ரசிகர்களுக்கு எனது உடம்பை செருப்பாக்கி தந்தால் கூட ஈடாகாது என பேசியது ரசிகர்களை உருக வைத்தது. இதனை அடுத்து தன்னுடன் லியோ திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் குறித்தும் இதற்கு முன்பு தன்னுடைய படங்களை இயக்கிய அட்லி, நெல்சன் மற்றும் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் குறித்தும் சுவாரசியமான தகவல்களை கூறினார்.

அட நீ சோத்துக்கு செத்ததா… லியோ சக்சஸ் மீட்டில் பேசிய திரிஷாவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

அப்படி லியோ படத்தில் தனக்கு 5வது முறையாக ஜோடியான நடிகை திரிஷா குறித்து, 20 வயதில் ஒரு பொண்ணு ஹீரோயின் ஆவது விஷயம் இல்ல.. 20 வருஷமாவே ஹீரோயினா தக்க வைக்கிறது இருக்கே.. அதுவும் அதே எனர்ஜி ஓட நம்ம இளவரசி குந்தவை தான் என புகழ்ந்து தள்ளி உள்ளார் விஜய்.