அட நீ சோத்துக்கு செத்ததா… லியோ சக்சஸ் மீட்டில் பேசிய திரிஷாவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

Leo Movie Success Meet: லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் தனக்கு காரப்பொறி வாங்கி தரல என திரிஷா மிகவும் கலகலப்பாக பேசியதை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் லியோ என தொடர்ந்து ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கும் திரிஷா லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்படி நல்ல வேலை இந்த படத்தில் ஹெரோல்டு தாஸ் மூலமாக லோகேஷ் என்னை போட்டு தள்ளவில்லை லியோ 2-வில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது இன்னும் விஜய் எனக்கு காரப்பொறி வாங்கி தரவில்லை. நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது பழைய ஸ்கூல் பிரண்டுடன் மீண்டும் கெட்டு டூ கெதர் சென்றது போல தான் செம ஜாலியாக இருக்கிறது எனக் கூறினார்.

என் தோலை செருப்பா தச்சு போட்டா கூட பத்தாது.. ! லியோ சக்சஸ் மீட்டில் உருக்கமாக பேசிய விஜய்..

அதாவது சத்யா கேரக்டரில் நடித்திருந்த திரிஷா சத்யா கதாபாத்திரம் லோகேஷ் கனகராஜ் எனக்கு கொடுத்ததற்கு ரொம்பவே நன்றி, நானும் எல்சியு-வில் இடம் பெற்றது மகிழ்ச்சி என பேசியவுடன் ரசிகர்கள் அரங்கத்தையே அதிர வைத்தனர். மேலும் நடிகர் அர்ஜுனுடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் அது தொடர்பான அறிவிப்பும் கூடிய சீக்கிரமே வரும் என்றும் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடிப்பது குறித்தும் பேசினார் திரிஷா.

இதற்கு முன்பு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக திரிஷா நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வருகிறார். அப்படி தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க இருக்கும் படத்தில் திரிஷா தான் ஹீரோயின் என கூறப்படுகிறது.

உங்களுக்கு கீழ் தான்” இந்த தளபதி” கட்டளை இடுங்கள் – லியோ வெற்றி விழாவில் விஜய் பேச்சு.!

மேலும் இப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் மோகன்லாலுடனும் ராம் என்னும் படத்திலும் டோவினோ தாமஸ் படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு லியோ படத்தின் வெற்றி விழாவில் மிகவும் கலகலப்பாக பேசிய திரிஷாவின் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.