என் தோலை செருப்பா தச்சு போட்டா கூட பத்தாது.. ! லியோ சக்சஸ் மீட்டில் உருக்கமாக பேசிய விஜய்..

Leo Movie Success Meet: லியோ படத்தின் வெற்றி விழா நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது ஸ்பீசிகளின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தனர். அதாவது தொடர்ந்து லியோ படத்தின் விமர்சனங்கள் அதிகமாக இருந்து வந்த நிலையில் அனைத்திற்கும் லியோ படத்தின் வெற்றி விழாவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள்.

அப்படி முக்கியமாக நடிகர் விஜய் தான் கூறிய விஷயங்களை அழகாகவும் தெளிவாகவும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
அந்த வகையில் என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. உண்மையை சொல்லனும்னா நீங்கதான் என்னை உங்கள் நெஞ்சுல குடி வச்சிருக்கீங்க நான் குடியிருக்கும் கோவில் நீங்க எல்லாம் என ஆரம்பத்திலேயே ரசிகர்களை உருக வைத்தார்.

லியோ வெற்றி விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லி விமர்சதவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய்.? 2026 – ல் கப்பு முக்கியம் பிகிலு..

மேலும் காக்கா-கழுகு கதையையும் சுவாரசியமாக பேசினார் முக்கியமாக லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லி ஆகிய மூன்று இயக்குனர்களுக்கும் தனது வெவ்வேறு வகையான கதைகளை கூறி அவர்களுடைய அண்ணனாக இருப்பதில் எனக்கு தான் பெருமை என்றும் சொல்லி இருந்தார்.

சமீப காலங்களாகவே சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு விஜய் ஆசைப்படுகிறார் என கூறப்பட்ட வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். வாரிசு திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 300 கோடி வசூல் செய்தது இதனை அடுத்து லியோ உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கேப்டன்னா அது ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர் தான்.. ஆனா தல-னா.. அரங்கை அதிரவிட்ட தளபதி விஜய்

இவ்வாறு இந்த சூழலில் லியோவுக்கு வெற்றி விழா எல்லாம் தேவையா என ஏராளமான யூடியூப் விமர்சகர்கள் ரசிகர்களை கடுப்பேற்றி வந்தனர். இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடைபெற்ற வெற்றி விழாவில் நடிகர் விஜய் மேடை ஏறியதும் ரஞ்சிதம் ஸ்டைலில் அனைவருக்கும் முத்தங்களை காற்றில் பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

விஜய் கூறியதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள் உண்மையை சொல்லணும்-னா நீங்கதான் என்னை உங்கள் நெஞ்சில் குடியிருக்க வச்சிருக்கீங்க நான் குடியிருக்கும் கோவில் நீங்க எல்லாம்.. இது கொஞ்சம் சினிமா டயலாக் மாறி தெரியலாம் ஆனால் நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டா கூட பத்தாது நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்.. என பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.