கேப்டன்னா அது ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர் தான்.. ஆனா தல-னா.. அரங்கை அதிரவிட்ட தளபதி விஜய்

Leo Success Meet: தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுவதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது. எனவே இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தற்பொழுது லியோ படத்தின் வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.

வழக்கம்போல என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்த விஜய் தொடர்ந்து தன்னுடைய ஸ்டைலில் ஏராளமான தகவல்களை பேசி அசத்தினார். இவர் பேசிய அனைத்து தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லியோ சக்சஸ் மீட்டில் காக்கா, கழுகை இழுத்த விஜய்.. ரஜினிக்கு தக்க பதிலடியா.?

மேலும் தனது ரசிகர்கள் கோபப்பட்டதை கண்டித்து விஜய் நமக்கு நிறைய பெரிய வேலைகள் இருக்கு தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் கோபப்பட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூறினார். இந்த வெற்றி விழாவில் அனைத்து விஷயங்களையும் அழகாகவும் தெளிவாகவும் பேசிய நடிகர் விஜய் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் கூறியதாவது, மக்கள் திலகம்-னா ஒருத்தர் தான், நடிகர் திலகம்-னா ஒருத்தன் தான், சூப்பர் ஸ்டார்-னா ஒருத்தர் தான், உலகநாயகன்-னா ஒருத்தர் தான், புரட்சி கலைஞர்-னா ஒருத்தர் தான், தல-னா ஒருத்தர் தான், தளபதி- னா.. நீங்கள்தான் மன்னர்கள் நான் உங்கள் கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்.. என தனது அரசியல் குறித்தும் விஜய் அறிவித்துள்ளார்.

உங்களுக்கு கீழ் தான்” இந்த தளபதி” கட்டளை இடுங்கள் – லியோ வெற்றி விழாவில் விஜய் பேச்சு.!

இவ்வாறு மேலும் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி தனது காக்கா-கழுதை கதையும் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. அப்படி லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லி என மூன்று இயக்குனர்களுக்கும் வெவ்வேறு கதைகளை கூறிய விஜய் கடைசியில் அவர்களின் அண்ணனாக இருப்பதில் எனக்கு தான் பெருமை என்றும் பேசியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.