உங்களுக்கு கீழ் தான்” இந்த தளபதி” கட்டளை இடுங்கள் – லியோ வெற்றி விழாவில் விஜய் பேச்சு.!

Leo Success Meet Vijay Speech : லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 19 தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது நேற்று இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது அதில் பங்கேற்ற தளபதி விஜய் மேடைபேசியது என்னவென்றால்..

என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பி.. இவ்வளவு நாள் நான் தான் உங்கள என் நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் நினைச்சேன் இப்போ தான் உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு பெரிய இடத்தை கொடுத்து உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன் என்னுடைய தோலை செருப்பாக தேய்த்துக் கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. நான் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன்.

மகாவுக்கு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணிய சூர்யா.. கௌதமை லெப்ட், ரைட் வாங்கிய ஐஸ்வர்யா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது ஏன் இவ்வளவு கோபம்  உடம்புக்கு நல்லதில்லை.. அதெல்லாம் வேண்டாம் நண்பா நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம் நம்முடைய வேலையும் இல்லை நமக்கு நிறைய வேலை இருக்கிறது..

பிறகு குட்டி ஸ்டோரி சொன்னார்.. ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டையாடுறாங்க அந்த காட்டுல மான், குயில், முயல்.. இந்த காக்கா, கழுகு காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே அதுக்கு சொன்னேன்.. ஒருத்தர் வில் அம்பு எடுத்து போகிறார், இன்னொருவர் ஈட்டி எடுத்து போகிறார் வில் எடுத்து போனவர் முயல பிடிச்சு தூக்கிட்டாரு ஈட்டி எடுத்தவர் யானையை குறி வைத்து மிஸ் பண்ணிட்டார்.

லியோ வெற்றி விழாவில் அஜித்தைப் பற்றி பேசி அரங்கை அதிரவிட்ட அர்ஜுன்.! ஆல் ஏரியாவிடம் தல கில்லி

ரெண்டு பேரும் ஊருக்கே திரும்பி வருவாங்க இதுல யாருக்கு வெற்றி யானை குறி வைத்தவர் தான் வெற்றியடைஞ்சவர். ஏன்னா நம்மால் எதில் எளிதாக வெல்ல முடியுமோ அதை செய்வது வெற்றி அல்ல.. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி முயற்சியாவது செய்ய வேண்டும் பெரிதினும் பெரிது கேள். ஆசைப்பட வேண்டும் அதில் எனக்கு தப்பு இருக்கு..

படத்துல வர பாட்டுல விரல் இடுக்குல தீ பறக்கணும் எழுதி இருக்காங்க அத பேனா என்று எடுத்துக் கொள்ளலாம் அதே போல பத்தாது பாட்டில் என்று எழுதியிருக்கிறார்கள் அதை ஏன் சரக்கு என எடுத்துக் கொள்ள வேண்டும் கூழ் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா இப்படியான மழுப்பலான கதை எல்லாம் சொல்லி நான் எஸ்கேப்பாக தேவையில்லை தயவுசெய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள்..

பள்ளி, கல்லூரி போகிற வழியில் ஒயின் ஷாப் இருக்கு ரெண்டு ரவுண்டு போட்டுவிட்டா ஸ்கூலுக்கு போகிறார்கள் ஒரு முறை ஏவிஎம் சரவணன் சார் வடபழனி மெயின் ரோட்டில் கார்ல போனப்ப சிக்னல்ல இருந்த ஒரு அம்மாவுக்கு உதவி செஞ்சிருக்காரு. அந்த அம்மா உடனே நீ நல்லா இருப்ப எம்ஜிஆர் என்று சொல்லி இருக்காங்க அந்த காலத்துல யார் அள்ளி கொடுத்தாலும்..

எம்ஜிஆர் அவர்கள் தான் இருக்கும் அப்படின்னு பேர் நாம யாரையும் ஒப்பிட்டு சேர்க்கல.. நம்ம அந்த அவ்வளவு பெரிய ஆளும் இல்ல ஆனா நல்ல விஷயத்தை எடுத்துக்கலாம் அந்த வகையில் எனக்கு ஒரு குட்டி ஆசை எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்க தான் பண்ணி இருக்காங்க அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும் என ஒரு ஆசை..

சரி லியோ படத்தை பற்றி பேசுவோம்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எண்ணி பெருமை கொள்கிறேன் மாநகரம் நம்ம பாக்கவச்ச, கைதி எல்லோரையும் பார்க்க வைத்தது, விக்ரம் இந்தியாவையே பார்க்க வைத்த இப்ப லியோ இன்னும் ஹாலிவுட் மட்டும் தான் பாக்கி இருக்குன்னு நினைக்கிறேன் உன்னை நினைக்கும் போது ரொம்ப பெருமையாய் இருக்கு 20 வயசுல ஹீரோயின் ஆகிறது.

பெருசில்லா 20 வருஷமா ஹீரோயின்னா இருக்கிறது தான் பெருசு நம்ம இளவரசி குந்தவை த்ரிஷா சூப்பர், சஞ்சய் தத் சார், அர்ஜுன் சார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என இந்த படத்துல அங்கமாய் இருக்கிற எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் அட்லீ, லோகேஷ், நெல்சன் எல்லோரும் நம்ம பசங்க அவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன்.

அவர்கள் மிகத் திறமையானவர்கள் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் பாருங்க புரட்சித்தலைவர்னா ஒருத்தவர் தான்.. நடிகர் திலகம்னா ஒருத்தர் தான்.. அதே மாதிரி உலகநாயகன் ஒருத்தர் தான்.. சூப்பர் ஸ்டார் நான் ஒருத்தர் தான்,, தல – ன்னா ஒருதர் தான்.. நீங்கள் மன்னர்கள் நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன் என விஜய் தெரிவித்தார்.