லியோ வெற்றி விழாவில் அஜித்தைப் பற்றி பேசி அரங்கை அதிரவிட்ட அர்ஜுன்.! ஆல் ஏரியாவிடம் தல கில்லி

Leo : தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஸ்கின், மன்சூர் அலிகான்..

கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். லியோ படம் அதிக ஆக்சன், எமோஷனல் என இருந்ததால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இருப்பினும் வசூலில் மட்டும் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் லெவலுக்கு எதிர்பார்த்து ஃபிளாப் அடைந்த விஜய் படம்.! 24 வருடமாக தளபதியை ஒதுக்கி வரும் இயக்குனர்..

இதுவரை மட்டுமே 490 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. லியோ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை அள்ளி உள்ளதால் நேற்று லியோ டீம் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழா நடத்தியது இதில் மொத்தம் 6000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

விஜய், அர்ஜுன், அனிருத், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார்   என பலர் கலந்து கொண்டனர். அனிருத் மேடையில் பாட்டுப்பாடி பலரையும் சந்தோஷப்படுத்தினார் அதன் பிறகு விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி அதிரவிட்டார்.  அர்ஜுன் மேடை ஏறி  த்ரிஷாவுடன் இது எனக்கு இரண்டாவது படம்..

உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை ரவியை திட்டி அனுப்பிய குடும்பத்தினர்.! யாரும் இல்லாத நேரத்தில் மீனா பார்த்த வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

முதலில் அஜித்தின் மங்காத்தா படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்திருந்தேன் என கூறினார். இவர் சொன்ன உடனேயே அதிரமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடினர். இதை பார்த்த ரசிகர்கள் விஜயன் லியோ வெற்றி விழாவில் தரமான செய்கை என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.