முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வனாக வாழ்ந்தது போல்.! விஜய்யிடம் அர்ஜுன் கேட்ட கேள்வி…

Leo Movie Success Meet: லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அர்ஜுன் விஜயா இருக்கிறது மிகவும் ஈஸியா? கஷ்டமா? என கேட்க அதற்கு விஜய் கூறிய பதில் குறித்து பார்க்கலாம். மேலும் மக்கள் இதற்கு முன்பெல்லாம் என்னை பார்க்கும் இடங்களில் ‘ஜெய் ஹிந்துன்னு’ சொல்வார்கள் இந்த படத்திற்குப் பிறகு ‘த்தேறிக்க’என அழைப்பதாகவும் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அப்டேட்டை வெளியிட்டது. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்தனர்.

அட நீ சோத்துக்கு செத்ததா… லியோ சக்சஸ் மீட்டில் பேசிய திரிஷாவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!

இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த 19ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியான லியோ படத்திற்கு ‌ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் பிளாக்பஸ்டர் கிட்டடித்துள்ளது.

நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், திரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் ஹெரோல்டு தாஸ் கேரக்டரில் நடித்திருந்த அர்ஜுன் மக்கள் என்னை எங்கு பார்த்தாலும் ‘ஜெய்ஹிந்த்’ என சொல்வார்கள் இந்த படத்துக்கு பிறகு ‘த்தேறிக்க’ என்று அழைக்கின்றனர்.

என் தோலை செருப்பா தச்சு போட்டா கூட பத்தாது.. ! லியோ சக்சஸ் மீட்டில் உருக்கமாக பேசிய விஜய்..

மங்காத்தா படத்தில் திரிஷாவுடன் நடித்த பிறகு லியோ படத்தில் நடித்திருக்கிறேன் இரண்டு படங்களிலும் ஜோடியாக இல்லை. சிவாஜிக்கு பிறகு விஜய் இடம் நேரம் தவறாமையை பார்க்கிறேன் 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கு செட்டுக்கு வந்து விடுவார். அவ்வளவு அர்ப்பணிப்பு உள்ள சிம்பிளான ஒருவர் விஜய்க்கு தலைவருக்கான தகுதி உள்ளது.

விரைவில் அவர் அரசியலுக்கு வந்து விடுவார் எனவும் அர்ஜுன் கூறினார். இதனை அடுத்து அர்ஜூன் விஜய்யாக இருப்பது கஷ்டமா? ஈசியா? என்று விஜய்யை கேட்க அதற்கு விஜய் பாக்குறதுக்கு வேணா கஷ்டமா இருக்கலாம்; ஆனா, உண்மையை சொல்லனும்னா அது ஈஸிதான் அதுக்கு காரணம் ரசிகர்கள் தான் என கூறினார்.