முக்கிய இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடித்த விஜயின் லியோ.. முழு விவரம் இதோ.!

Leo : தளபதி விஜய் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ படத்தில் நடித்தார்.  அக்டோபர் 19ஆம் தேதி உலகம் எங்கும் வெளியானது. படத்தில் விஜயுடன் இணைந்து  மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, அர்ஜுன், சஞ்சய் தத்..

மேத்யூ தாமஸ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தனர் . படம் அதிக ஆக்சன், எமோஷனல் என கலந்து இருந்ததால்  லியோ படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் ஆரம்பத்தில் இருந்தே லியோ படத்தின் வசூல் தாறுமாறாக அள்ளியது.

Thalapthy 68 : பிரசாந்தை வைத்து கதையை நகர்த்தும் வெங்கட் பிரபு.. அவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.? படம் மிரட்ட போகுது

லியோ படக்குழு எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளியதால் நவம்பர் 1ஆம் தேதி வெற்றி விழா வைத்தது அதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ், படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன் என பலரும் கலந்து கொண்டனர் விஜய் குட்டி ஸ்டோரி சொன்னார் நிகழ்ச்சியும் சிறப்பாக அரங்கேறி முடிந்தது.

இதுவரை மட்டுமே லியோ படம் சுமார் 565 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் பல முக்கிய இடங்களில் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

BIGGBOSS 7 : இரண்டு முறை கேப்டன் ஆனதால் உங்களுக்கு மமதை வந்துவிட்டது.. பூர்ணிமாவே வறுத்தெடுத்த கமல்.!

கேரளா, GULF நாடுகள், FRANCE, UK, வட இந்தியா ஜெர்மன் சிங்கப்பூர் போன்ற இடங்களில்  ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்து உள்ளதாக கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே தமிழ்நாட்டிலும் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கும் என சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக சொல்லவில்லை.