Thalapthy 68 : பிரசாந்தை வைத்து கதையை நகர்த்தும் வெங்கட் பிரபு.. அவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.? படம் மிரட்ட போகுது

Thalapathy 68 : தளபதி விஜய் லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “தளபதி 68” படத்தில் நடித்து வருகிறார் அண்மையில் பூஜை போடப்பட்டு முதல் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

விஜய் உடன் இணைந்து மைக் மோகன், லைலா, சினேகா, அரவிந்த், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, கங்கை அமரன், பிரசாந்த்,  யோகி பாபு, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்தை இசையமைக்கிறார் எஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது.

காதலிச்சவன், கணவன் தொல்லைக்கு.. இயக்குனருடன் இரவை பகிரலாம்.. அசால்டாக பேசும் நயன்தாரா பட நடிகை.!

தளபதி 68 படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த படமாக உருவாகி வருகிறது. ஒரு சிலர் உடைய கதாபாத்திரம் குறித்து தகவல் கசிந்து உள்ளது. எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விஜய் இந்த படத்தில் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறாராம். மேலும் படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய்க்கு பிறகு முக்கிய கதாபாத்திரமாக பார்க்கப்படுவது பிரசாந்த் கதாபாத்திரம் தான் இந்த படத்தில் விஜய்க்கு நண்பராக அவர் நடிக்கிறாராம். நடிகர் பிரசாந்தின் கதாபாத்திரம் தான் பல டூஸ்ட்களை வைக்க இருக்கிறது என கூறப்படுகிறது.

பெரிய மீனுக்கு வலை வீசிய ராகவா லாரன்ஸ்.. காஞ்சனா 2 படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.?

இந்த படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் பிரசாந்த் விட்ட இடத்தை பிடிப்பார் என சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானால் நடக்கலாம் தளபதி 68 படத்தை தொடர்ந்து பிரசாந்த் கையில் அந்தகன் படமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.