பெரிய மீனுக்கு வலை வீசிய ராகவா லாரன்ஸ்.. காஞ்சனா 2 படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.?

Raghava lawrence : சினிமாயுலகில் இன்று உச்சத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல அந்த வகையில் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் நடன கலைஞராக இருந்து பின் டாப் ஹீரோக்களின் படங்களில் சின்ன சின்ன ரோல் மற்றும் பாடலுக்கு நடனமாடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்.

அதன் பிறகு ஹீரோவாக படங்களில் நடித்தார் ஆனால் அவருடைய படங்கள் சரியாக போகாததால் ஒரு கட்டத்தில் இவரே படங்களை இயக்கி நடிக்க ஆரம்பித்தார். அப்படி இவர் நடித்த காஞ்சனா சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடி உள்ளது அந்த வகையில் காஞ்சனா 2, காஞ்சனா 3 தொடர்ந்து  காஞ்சனா 4 பாகத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்து இருகின்றனர்.

மார்க்கெட்டை இழந்தாலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி பிழைத்துக் கொண்ட 5 நடிகைகள்.! முரட்டு நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலைமையா.?

ஆனால் ராகவா லாரன்ஸ் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ராகவா லாரன்ஸ் கைவசம் ஜிகர்தண்டா, டபுள் எக்ஸ் அதிகாரம் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதில் முதலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கூறி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. காஞ்சனா 2 -வது பாகத்தில் ரஜினியை நடிக்க வைக்க  முதலில் அவரிடம் போய் பேசினேன் ஆனால் அது நடக்கவில்லை எனக் கூறி இருக்கிறார்.

Rajini
Rajini

பிரதீப் வெளியேறியதால் ஆண்டவருக்கே கட்டம் கட்டிய முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!

இதை பார்த்த ரசிகர்கள் தலைவா நல்ல முயற்சி ஒருவேளை ரஜினி காஞ்சனா 2 படத்தில் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அதை வைத்து அடுத்தடுத்த பாகங்களையும் எடுத்திருக்கலாம் ஆனால் அது நடைபெறாமல் போனது வருத்தம் தான் எனக் கூறிய கமெண்ட் எடுத்து வருகின்றனர்.