BIGGBOSS 7 : இரண்டு முறை கேப்டன் ஆனதால் உங்களுக்கு மமதை வந்துவிட்டது.. பூர்ணிமாவே வறுத்தெடுத்த கமல்.!

Bigg Boss 7 promo : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 7 -வது சீசன் கடந்த அக்டோபர் 1 தேதி வெளியாகி நான்கு வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.. இதில் இதுவரை எவிக்ஷனில் அனன்யா, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன் போன்றோர்.

வெளியேற பாபா செல்லத்துரை உடல்நிலை குறைவு காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக போட்டியாளர்கள் சிலர் சேர்ந்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டனர்..  இருந்தாலும் இந்த வாரம் எவிக்க்ஷன் இருக்கும் என கமல் கூறி இருக்கிறார்..

Thalapthy 68 : பிரசாந்தை வைத்து கதையை நகர்த்தும் வெங்கட் பிரபு.. அவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.? படம் மிரட்ட போகுது

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றவர்களில் குறைந்த ஓட்டுகளை பெற்று அக்ஷயா, கானா பாலா, ஐஷு போன்றோர் டேன்ஜர் சோனில் இருந்தனர். இவர்களில் யாராவது ஒருவர்தான் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த நேரத்தில் இன்றைக்கான பிக்பாஸ் மூன்றாவது புரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் கமல் பூர்ணிமாவை பார்த்து நீங்கள் சொன்ன ஒரு கமெண்டை நினைவுபடுத்துகிறேன். அவர் சும்மா ஒரு கார்டு கொடுத்தாரு, ஆனால் நான் ஆல் செலக்ட் பண்ணிட்டேன் என்று சொன்னீங்க.. இப்ப திரும்பவும் ஒரு முறை கார்டு கொடுக்கிறேன் இதை யாருக்கு கொடுக்கணுமோ கொடுங்கள் என்று கமல் சொல்கிறார்..

பெரிய மீனுக்கு வலை வீசிய ராகவா லாரன்ஸ்.. காஞ்சனா 2 படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவரா.?

பிறகு பிக்பாஸ் ஒன்றும் சும்மா அந்தக் காடை கொடுக்கவில்லை என இப்பவாவது புரிஞ்சுகிட்டிங்களா என்கிறார்.. பிறகு இரண்டு முறை நீங்கள் கேப்டன் ஆனதால் மமதை வந்து விட்டதோ என தோணுது என்று கமலஹாசன் பூர்ணிமாவை வறுத்தெடுக்கிறார் இதற்கு ஆடியன்ஸ் சப்போர்ட் பண்ணுகின்றனர்.