ரஜினியின் கோபத்தால் விஜயகாந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்.. இதுக்கு பேரு தான் தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கிறதா.?

Vijayakanth : 70 வயதை தாண்டிய பிறகும் சினிமாவில் தொடர்ந்து ஓடி கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் ரஜினியும், கமலும் நல்ல வெற்றி படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத இரு நடிகர்களாக மாறினார் அந்த சமயத்தில் தான் விஜயகாந்தும் என்ட்ரி கொடுத்து கிராமத்து கதை உள்ள படங்களில் நடித்த அவர்களுக்கு சவால் விட்டார்.

கைகோர்ப்போம் துயர் துடைப்போம்.. களத்தில் இறங்கிய தளபதி விஜய்

விஜயகாந்த் சினிமா உலகில் கால் தடம் பதிக்க முக்கிய காரணமே ரஜினி என சொல்லப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ரஜினி ஒரு புதிய படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்தார் அந்த படத்தின் ஷூட்டிங் திடீரென மதுரையில் எடுக்கப்பட்டது ரஜினியும் அங்கு சென்று நடித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு ரூமில் மது அருந்து கொண்டிருந்தாராம் ரஜினி விடுதியில் தங்கியிருப்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அங்கு சென்று இருக்கிறார்கள் ரஜினி மது அருந்தியதால் ரசிகர்களுடன் சத்தம் போட்டு உள்ளார் அது பெரிய விஷயமாக வெடிக்க படத்தின் தயாரிப்பாளர் எம். கே. காஜா அங்கு விரைந்து வந்தார்.

படம் சரியாக வராததால் டென்ஷன்னா அஜித்.. ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை

விஜயகாந்த் வீடுக்கு அருகில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார் ஒருமுறை விஜயகாந்த் அவருடைய நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார் எதேச்சையாக பார்த்த எம் கே காஜா விஜயகாந்த் சூப்பராக உடைய அணிந்து  ரஜினி போல் இருந்தாராம் உடனே விஜயகாந்த் அழைத்து உன் பெயர் என்ன என கேட்டாராம் விஜயராஜ் என்று சொன்னதும்..

உன்னை நான் முன்னதாக பார்த்திருந்தால் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்திருப்பேன் உனக்கு சினிமாவில் நடிப்பதற்கான முகம் உள்ளது என கூறி இருக்கிறார் மேலும் ரஜினியை பாதுகாக்குற வேலையையும் விஜயகாந்த் இடமே கொடுத்துள்ளார் ரஜினி ஒரு தடவை விஜயகாந்த் கிட்ட நீங்க சினிமாவுல நடிக்கலாம் என சொன்னார்.

இப்படி விஜயகாந்தின் சினிமா ஆசை அவர்கள் தூண்டிவிட அவரது அப்பாவிடம் போய் கேட்டுள்ளார் மறுத்து உள்ளார் விஜயகாந்தின் அண்ணன் அப்பாவிடம் பேசி சிறிது பணம் வாங்கி விஜயகாந்தை அனுப்பி உள்ளார் அவருடன் அவருடைய நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் இரண்டு பேரும் சென்னைக்கு கிளம்பினார்களாம். இப்படி தான் விஜயகாந்தின் சினிமா பயணம் ஆரம்பமானது.