கைகோர்ப்போம் துயர் துடைப்போம்.. களத்தில் இறங்கிய தளபதி விஜய்

Actor Vijay: நடிகர் விஜய் ‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை உள்ளிட்ட சில மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏராளமானவர்கள் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.

சாப்பிட உணவு இல்லாமல் தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் திரை பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர். மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

எனவே ஆயிரம் கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதால் இந்த மக்களை வெள்ளம் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் உதவி கேட்டு வருகிறார்கள்.

படம் சரியாக வராததால் டென்ஷன்னா அஜித்.. ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை

அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் டிவி பிரபலங்களான பாலா நேராக பாதிப்பான இடத்திற்கு சென்று இருநூறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினார். அதேபோல் அறந்தாங்கி நிஷாவும் உணவுகள் வழங்கினார் மேலும் நடிகர்களான சூர்யா, கார்த்தி மற்றும் ஹரிஷ் கல்யாண் போன்றவர்களும் பணங்கள் கொடுத்து உதவி செய்து வருகிறார்கள்.

இவ்வாறு இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகர் விஜய் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்களும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆயிரம் கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகள் இன்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

கதை கேட்பதில் என்னுடைய குருநாதர் இவர்தான் – மனம் திறந்த அஜித்

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து மீட்க உதவி கேட்டு இன்னுமும் நிறைய குரல்கள் சமூக வலைதளங்களில் வழியாக வந்த வண்ணம் உள்ளன. இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கொள்கிறேன் என்றும் கைகோர்ப்போம் துயர்துடைப்போம் என்ற ஹாஸ் டேக்கையும் பயன்படுத்தி உள்ளார்.