கதை கேட்பதில் என்னுடைய குருநாதர் இவர்தான் – மனம் திறந்த அஜித்

Ajith : சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் அதற்கு காரணம் அவர்கள் தேர்வு செய்யும் கதை தான் ஒவ்வொரு நடிகருமே வித்தியாசமாக கதைகளை தேர்வு செய்வார்கள் அந்த வகையில் நடிகர் அஜித் குமார்..

ஆரம்பத்தில் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் நம்பி கதையை கேட்காமல் நடித்த காலமெல்லாம் உண்டு ஆனால் இப்பொழுது நன்கு கதைகளை கேட்டு நடிக்க ஆரம்பிக்கிறார் அதனாலயே அஜித்தை தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு பிளாக்பஸ்டர் ஹிட்..

தமிழுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அதிர்ச்சியாகும் மேக்னா.! கையும் களவுமாக மாட்டிக் கொண்ட நமச்சி.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்.

அதை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க மகிழ் திருமேனி உடன் கைகோர்த்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம் அஜித் 10 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.

அவருடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சஞ்சய த்த போன்றவர்களும் நடித்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன இந்த நிலையில் அஜித்குமார் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பழைய பேட்டி ஒன்றில் கதை கேட்பதில் ஒரு பாலிவுட் நடிகரை பின்பற்றுகிறேன் என கூறினார் இந்த நடிகர் வேறு யாரும் அல்ல அமீர் கான் தான் என தெரிவித்தார்..

போர்க்களத்தில் இறங்கிய ஈஸ்வரி? தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட குணசேகரன்..

ஒரு கதையை நான் கேட்கும் போது அந்த கதை எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறது, என்னை ரசிக்க வைக்கிறது, அழ வைக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன் அதன் பின்னரே அந்த கதையில் என் கதாபாத்திரம் என்னை என்பதை பார்ப்பேன் என அமீர்கான் ஒரு முறை சொன்னார் அதேதான் நானும் பின்பற்றுகிறேன் என அஜித்தும் கூறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.