அந்த நல்ல உள்ளத்திற்கு ஒன்னும் ஆகாது.. விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார் – பிரபல நடிகர்

Vijayakanth : கேப்டன் என்றால் நான் நினைவிற்கு வரும் முதல் பெயர் விஜயகாந்த். ஏனென்றால் சினிமா உலகில் தான் மட்டும் வளராமல் தான் கூட இருந்தவர்களையும், திறமையானவர்களையும் வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் விஜயகாந்த்.  மேலும் தமிழ் சினிமா இன்ட்ரஸ்டியலில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதை முதலாக முந்திக்கொண்டு போய் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார்.

எதற்கும் பயப்பட மாட்டார் மேலும் தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட் மேன் வரை டாப் ஹீரோ வரை அனைவருக்கும் கறி சோறு போட்டு அழகு பார்த்தவர்று இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர். 80, 90களில் விஜயகாந்த் உடன் நடித்த நடிகர், நடிகைகள் பலரும் விஜயகாந்த் நன்றாக இருந்தால் எங்களுக்கு கஷ்டமே கிடையாது என பல பேட்டிகளில் சொல்லி வருவதையும் நாம் கண்டு வருகிறோம்.

காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.. வாடிவாசலுக்கு ஆப்பு வைத்த அஜித்.! வெளியான தகவல்

சினிமாவில் வெற்றி நடை கொண்டு வந்த விஜயகாந்த் அரசியலிலும் ஆரம்பத்திலேயே பட்டையை கிளப்பினார்.  சினிமா, அரசியல் என இவருடைய வாழ்க்கையில் ஓய்வே இல்லாமல் ஓடியதால் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனது.  அதன் பிறகு ஓய்வெடுத்துக் கொண்டு கொண்டிருந்த விஜயகாந்த் முக்கிய மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே தன்னுடைய அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்களை பார்ப்பார் இப்படிப்பட்ட விஜயகாந்த் திடீரென உடல் ரொம்ப மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இதை அறிந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பார்த்து வருகின்றனர் ஒரு சிலர் டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டு வருகின்றனர் அப்படி பார்த்திபன் ஒரு பதிவை போட்டுள்ளார் அவர் சொன்னது எல்லாம் வென்றால்..

“நோ டச்” நான் சென்ஸ் என்று தினேஷை திட்டிய மாயா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

ஏகமனதாக எல்லோராலும் நல்ல மனதுக்காரர் என போற்றப்படுபவர் திரு. விஜயகாந்த் நேற்று அவரது துணைவியாருக்கு குறுஞ்செய்தியை அனுப்பினேன் மருத்துவமனையில் இருந்து இன்று ஒரு அறிக்கை அதிர்ச்சியாக இருந்தது எனக்கு தெரிந்து குறை சொல்ல ஏதுமற்ற உள்ளமது.. குறைவின்றி நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.