கோடி ரூபாய் கொடுத்தாலும் 5 கொள்கையில் இருந்து மாறாத விஜயகாந்த்.. அதனாலதான் இவரை கேப்டனு சொல்றாங்க

Captain Vijayakanth: தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இவர் குறித்த ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விஜயகாந்த் சினிமாவில் தான் அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தன்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்தார்.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலிலும் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு கட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசியலில் பெரிதாக ஈடுபட முடியவில்லை. எனவே தேமுதிக கட்சிக்கு சரிவு ஏற்பட்டது பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு காலமானார்.

பணம் எனக்கு முக்கியம் இல்லை பழக்கவழக்கம்தான் முக்கியம்.. பத்து பைசா பணம் வாங்காமல் படத்தில் நடித்த 5 நடிகர்கள்..

இவருடைய மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்த் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது என்ன நடந்தாலும் இந்த ஐந்து விஷயங்களை மட்டும் மாத்திக்கொள்ள முடியாது என கொள்கை உடன் இருந்துள்ளார் அது குறித்து பார்க்கலாம்.

1. முதலாவதாக தமிழ் மொழி திரைப்படத்தை தவிர வேறு எந்த மொழி திரைப்படத்தில் கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்து உள்ளார். எனவே பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை நிராகரித்து வந்துள்ளார்.

2. மேலும் நீ எத்தனை கோடி கொடுத்தாலும் நான் விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாராம்.

3. ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக அறிமுகமான கேப்டன் இதற்கு மேல் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியாது என சினிமாவிலும் வில்லனாக நடிப்பதை நிறுத்த முடிவு செய்து ஹீரோவாக மட்டுமே நடித்து வந்துள்ளார்.

படம் முழுக்க பழம் போல் இருந்துக் கொண்டு கிளைமாக்ஸில் மெயின் வில்லனாக மிரட்டிய மூன்று ஹீரோக்கள்..

4. ஃபிளே பாய் ஆக நடிப்பது, பெண்களை தவறாக சித்தரிப்பது போன்ற படங்களில் நடிப்பதை தவிர்த்து உள்ளார்.

5. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதிக சம்பளத்துக்கு விஜயகாந்த் ஒரு பொழுதும் ஆசைப்பட்டது கிடையாது என ஏராளமான இயக்குனர்கள் கூறியுள்ளனர்.