பணம் எனக்கு முக்கியம் இல்லை பழக்கவழக்கம்தான் முக்கியம்.. பத்து பைசா பணம் வாங்காமல் படத்தில் நடித்த 5 நடிகர்கள்..

Tamil Actors: பாசத்திற்காக ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் திரைப்படங்களில் நடித்து கொடுத்திருக்கும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். பொதுவாக சினிமாவை பொருத்தவரை பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தோல்வியினை சந்தித்து விட்டால் சில நடிகர்கள் குறைவான சம்பளத்தை பெற்றுக் கொள்வார்கள். மேலும் மீண்டும் அந்த இயக்குனருக்கு ஒரு படத்தில் நடித்து கொடுப்பார்கள் அப்படி பாசத்துக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்த நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

நயன்தாரா: நடிகை நயன்தாரா தனுஷின் நட்புக்காக லோக்கல் பாய்ஸ் பாட்டுக்கு எந்த ஒரு பேமெண்ட்டும் வாங்காமல் டான்ஸ் ஆடி கொடுத்திருப்பார்.

படம் முழுக்க பழம் போல் இருந்துக் கொண்டு கிளைமாக்ஸில் மெயின் வில்லனாக மிரட்டிய மூன்று ஹீரோக்கள்..

மம்முட்டி: மெகா ஸ்டார் மம்முட்டி இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த பேரன்பு திரைப்படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்.

சூரியா: சூர்யா கமல் அவர்களுடன் நட்புக்காக விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இவ்வாறு ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவிலும் பேசப்பட்டது.

விஜயகாந்த்: விஜயகாந்த் அவர்கள் எஸ்.ஏ சந்திரசேகர் உடன் இருந்த நட்புக்காக செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்யின் அண்ணனாக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்து கொடுத்திருப்பார்.

படம் முழுக்க பழம் போல் இருந்துக் கொண்டு கிளைமாக்ஸில் மெயின் வில்லனாக மிரட்டிய மூன்று ஹீரோக்கள்..

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வேலைக்காரன் படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருப்பார். ஒரு முழு படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்திருக்கும் நடிகராக ரஜினிகாந்த் விளங்குகிறார்.

இவ்வாறு இந்த ஐந்து பிரபலங்களும் அவர்களின் மேல் வைத்திருந்த அன்புக்காகவும் பழக்க வழக்கத்திற்காகவும் பணத்தை பெரிதாக எண்ணாமல் நடித்துக் கொடுத்துள்ளனர். அப்படி விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்த சூர்யாவின் கேரக்டர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.