விஜயகாந்த் VS சரத்குமார் : நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்றது யார் தெரியுமா.?

சினிமா உலகில் போட்டிகள் இருந்து கொண்டே இருக்கும் அப்படி கேப்டன் விஜயகாந்த் உடன் பல நடிகர்கள் நேருக்கு நேர் மோதி உள்ளவர்கள் குறிப்பாக விஜயகாந்த் – ரஜினி, விஜயகாந்த் – கமல், விஜயகாந்த் – ராமராஜன், விஜயகாந்த் – பிரபு போன்றவர்களை தொடர்ந்து விஜயகாந்த் – சரத்குமாரும் பலமுறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் யார் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1988 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் உள்ளத்தில் நல்ல உள்ளம் படமும், சரத்குமார் நடித்த கண் சிமிட்டும் நேரம் படமும் வெளியானது. இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

மகாவுடன் வாழ முடியாதுன்னு சொன்ன சூர்யாவை லாக் செய்த வேதாச்சலம் – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

1990 -ல் விஜயகாந்தின் என்கிட்ட மோதாதே படமும், சரத்குமாரின் பாலைவன பறவைகள் படமும் நேருக்கு நேர் மோதியது. இதில் சரத்குமாரின் பாலைவன பறவைகள் பல திரையரங்குகளில் 100 நாட்களில் ஓடியது, விஜயகாந்த் படமும் நன்றாக ஓடியது.

1994 -ல் விஜயகாந்தின் பெரிய மருது படமும், சரத்குமாரின் நாட்டாமை படமும் நேருக்கு நேர் மோதியது இதில் விஜயகாந்தின் படம் ஹிட் அடித்தது சரத்குமாரின் நாட்டாமை படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மேகனாவால் குடும்பத்தில் ஏற்பட்ட சர்ச்சை… பிரிவில் தமிழும் சரஸ்வதி.? எதிர்பார்ப்பில் தமிழும் சரஸ்வதியும்

2002 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தேவன் படமும், சரத்குமாரின் தென்காசி பட்டணமும் படமும் நேருக்கு நேர் மோதியது இதில் தேவன் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது சரத்குமார் படம் சுமாராக ஓடியது.

2003 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தென்னவன் படமும், சரத்குமாரின் திவான் படமும் நேருக்கு நேரு கிளாஸ் ஆனது. இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

2006 -ஆம் ஆண்டு அக்டோபரில் விஜயகாந்தின் தர்மபுரி படமும், சரத்குமாரின் தலைமகன் படமும் வெளியானது இதில் இரண்டு படங்களுமே சுமாராக ஓடின.