Vijayakanth VS Kamal : 22 முறை நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்று யார் தெரியுமா.?

கேப்டன் விஜயகாந்த் சினிமாவிழும் சரி, நிஜத்திலும் சரி ஒரே மாதிரியானவர் பாசம் வைத்தால் ரொம்ப பாசம் வைப்பார் கோவப்பட்டாலும் ரொம்ப கோபப்படுவார் அந்த கோபமும் நியாயமாக தான் இருக்கும் என பலரும் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட விஜயாகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதினார். அதன் பிறகு அவரைப் பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருக்கின்றன இந்த நிலையில் விஜயகாந்த் உடன் கமலஹாசன் சுமார் 22 முறை நேருக்கு நேர் மோதி உள்ளார் இதில் யார் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

நான் இல்ல.. நான் இல்ல.. வெளியே வந்து கத்திய விஜயகாந்த்! எமோஷனலாக சொன்ன நடிகை கஸ்தூரி

சங்கர் லால் – சிவப்பு மல்லி : 1981 ஆம் ஆண்டு கமலின் சங்கர் லால் படமும், விஜயகாந்தின் சிவப்பு மல்லி படமும் நேருக்கு நேர் கிளாஸ் ஆனது இதில் கமல் படம் வெற்றி பெற்றது. மூன்றாம் பிறை –  பார்வையின் மறுபக்கம் : கமலின் மூன்றாம் பிறை, விஜயகாந்த் நடித்த பார்வையின் மறுபக்கம் நேருக்கு நேர் மோதியது இதில் மூன்றாம் பிறை படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள் இந்த படத்தை எதிர்த்து கமலின் எனக்குள் ஒருவன் திரைப்படம் வெளியானது இதில் வைதேகி காத்திருந்தால் வெற்றி பெற்றது. 1985 ல் கமலின் கதையின் டைரி படமும், விஜயகாந்தின் அலை ஓசை படமும் நேருக்கு நேர் மோதியது. விஜயகாந்த் படம் தோல்வி அடைந்தது.

2023-ன் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற சன் டிவி பிரபலம்.! மறைந்தும் மக்களின் மனதில் வாழ்வும் நடிகர்..

1985 மார்ச் மாதத்தில் கமலின் காக்கி சட்டை படத்துடன், விஜயகாந்த் நடித்த ராமன் ஸ்ரீராமன் படம் மோதியது இதில் விஜயகாந்த் படம் தோல்வி அடைந்தது. 1984 எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான  ஜப்பானில் கல்யாணராமன் படமும், ஏமாறாதே ஏமாற்றாதே படமும் வெளியானது. விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

1986 ஆம் ஆண்டு விஜயகாந்தின் தர்ம தேவதை, தழுவாத கைகள் படம் வெளியானது இதை எதிர்த்து விஜயகாந்தின் புன்னகை மன்னன் வெளியானது இதில் விஜயகாந்த் படங்கள் சரியாக ஓடவில்லை. 1987-ல் கமலின் காதல் பரிசு போட்டியாக விஜயகாந்தின் சிறைப்பறவை படம் வெளியானது இதில் விஜயகாந்த் படம் வெற்றி பெற்றது.

1987 அக்டோபரில் கமலின் நாயகன் படமும், விஜயகாந்தின் உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்கள் வெளியாகின இதில் மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. 1992 கமலின் சிங்காரவேலன் படத்தோடு விஜயகாந்த் நடித்த பரதன் படம் மோதியது இரண்டு படங்களுமே சுமாரான வசூலை அள்ளியது.

1992  ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த காவிய தலைவன் படத்துடன், கமல் சிவாஜி நடித்த தேவர்மகன் படம் ஓதியது இதில் கமல் படம் வெற்றி பெற்றது. 1994 ஆம் ஆண்டு  கமல் நடித்த மகாநதி படமும், விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐபிஎஸ் படமும் வெளியானது இதில் விஜயகாந்த் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

1994 நவம்பர் மாதத்தில் விஜயகாந்தின் பெரிய மருது படமும் கமலின் நம்மவர் படமும் வெளியானது இதில் இரண்டு படங்களுமே சுமாராக ஓடியது. கமலின் அவ்வை சண்முகி படமும்,  விஜயகாந்தின் அலெக்சாண்டர் படமும் மோதியது இதில் விஜயகாந்த் படம் சுமாராக ஓடியது.

2001 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த தவசி படமும், கமல் இரட்டை வேடத்தில் நடித்த ஆளவந்தான் படமும் நேருக்கு நேர் மோதியதில் விஜயகாந்த் படம் ஹிட் அடித்தது. கமலின் அன்பே சிவம் படமும், விஜயகாந்தின் தவசி படமும் வெளியானது இதில் விஜயகாந்த் படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.

2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் எங்கள் அண்ணா, கமலின் விருமாண்டி படம் போட்டி போட்டது இதில் விருமாண்டி அதிக வசூலை அள்ளியது. இருவரும் சேர்ந்து 22 முறை நேருக்கு நேர் மோதியதில் கமல் 9 முறையும், விஜயகாந்த் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 6 முறையை இரண்டு ஹீரோக்களின் படங்களும் சுமாரான வெற்றியை பெற்று தப்பித்துக் கொண்டது.