2023-ன் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்ற சன் டிவி பிரபலம்.! மறைந்தும் மக்களின் மனதில் வாழ்வும் நடிகர்..

Sun TV serial: 2023ஆம் ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதை சன் டிவி இயக்குனர் பெற்றிருக்கும் நிலையில் அது குறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் நாளுக்கு நாள் ஏராளமான புதிய சீரியல்களும் அறிமுகமாகி வரும் நிலையில் விறுவிறுப்பான கதை அம்சங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரையின் டாப் தொலைக்காட்சியாக விளங்கி வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருப்பதனால் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

நீ திருந்தவே மாட்ட.. KPY பாலாவை திட்டி தீர்த்த சிவகார்த்திகேயன்.. என்ன நடந்தது!

அப்படி கிட்டத்தட்ட18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் டாப் சீரியலாக விளங்குவது தான் எதிர்நீச்சல். பெண்களின் நிலைமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். சிறந்த கதைவுடன் ஒளிபரப்பாகி எதிர்நீச்சல் சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மரணம் அடைந்தார்.

எனவே தற்போது குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு சொல்லும் அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை இருப்பினும் வேறுபட்ட கதை மாற்றங்களுடன் விறுவிறுப்பாக இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் கொண்டு செல்கிறார். அப்படி கடந்த ஆண்டு இந்த சீரியலுக்கான விருதை எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பெற்றிருந்தார்.

2023-ல் மொக்கை வாங்கிய 5 பான் இந்திய திரைப்படங்கள்.. குழந்தைகளின் கார்ட்டூன் படமாக அமைந்த ஆதி புருஸ்

மொத்த டீமும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மக்களிடம் நடைபெற்ற வாக்கின்படி சிறந்த தொடராக எதிர்நீச்சல் சீரியல் தற்போது தேர்வாகியுள்ளது. இதற்கான விருதை பெற்ற இயக்குனர் திருச்செல்வம் அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்தார் இந்த விருதை மறைந்த நடிகர் மாரிமுத்துவிற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.