2023-ல் புஸ்வானமாக மாறிய 5 பான் இந்திய திரைப்படங்கள்.. குழந்தைகளின் கார்ட்டூன் படமாக அமைந்த ஆதி புருஸ்

Tamil Movies: 2023ஆம் ஆண்டில் ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இவ்வாறு வெற்றி திரைப்படங்களைப் போலவே மொக்கையான படங்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஆப்பு வைத்தது. அப்படி 2023 மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்து கடைசியில் மொக்கை வாங்கிய டாப் 5 பான் இந்திய படங்களில் லிஸ்டை பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2: மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் கடைசியாக பொன்னியின் செல்வன் 2 மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

சீக்கிரம் யாராச்சும் பட வாய்ப்பு கொடுங்கப்பா.. இதுக்கு மேல போச்சுன்னா மானம் கப்பல் ஏறிடும் .. லாஸ்ட்லியா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்..

ஆதிபுருஷ்: பல கோடி பட்ஜெட்டில் உருவான ஆதி புருஷ் படத்தின் டிரைலர், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. ஆனால் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படமாகவே அமைந்தது.

சந்திரமுகி 2: ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி 2 படத்தினை நீண்ட வருடங்கள் கழித்து வாசு இயக்கி வந்தார். இப்படம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வந்த நிலையில் ஆனால் படம் தோல்வியை சந்தித்தது.

மைக்கேல்: கே.ஜி.எஃப் படத்தினை கலர் ஜெராக்ஸ் அடித்தது போல் அமைந்த மைக்கேல் படமும் மொக்கையாக அமைந்தது.

பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க வைத்த 2023ன் 6 அறிமுக இயக்குனர்கள்..

ஜப்பான்: கார்த்தியின் 25வது படமாக அமைந்த ஜப்பான் திரைப்படம் படம் தோல்வியினை சந்தித்தது. தொடர்ந்து கைதி, பொன்னியின் செல்வன் என வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்த கார்த்தி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டார்.

இவ்வாறு இந்த ஐந்து திரைப் படங்களுக்காகவும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வந்த நிலையில் கடைசியில் மிக மொக்கையாக அமைந்தது. இதில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான  ஜப்பான் திரைப்படம் தான் படும் தோல்வியினை சந்தித்தது.